Coronavirus Editorial News

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா என்பது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், தேர்வை தள்ளிவைப்பது உகந்ததா என்பது குறித்து பெற்றோர்களும் சிந்திக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 10 -ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. `பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூலை 2-வது வாரத்தில் நடத்துவது குறித்து மதியம் 2.30 மணிக்குள் முடிவெடுத்து அரசு தரப்பில் பதில் தெரிவிக்க வேண்டும். ஜூன் 15-ல் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மதியம் மீண்டும் தொடங்கிய வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான நேரம் என வாதாடியது.

மேலும் தமிழகத்தில் 2 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் தேர்வை நடத்தத இதுவே சரியான நேரம் என வாதாடினர். தொடர்ந்து 10 -ம் வகுப்பு தேர்வு என்பது முக்கியமான தேர்வு என்றும், 11 மாநிலங்கள் ஏற்கெனவே இந்தத் தேர்வை நடத்தி முடித்துவிட்டன எனவும் தேர்வு மையங்களில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு வாதாடியது

Related posts

Cristiano Ronaldo scores his 100th goal for Portugal

Penbugs

Now you can order food through Instagram

Penbugs

சவுரவ் கங்குலி தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

Kesavan Madumathy

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

Penbugs

Satnam Singh, India’s 1st player in NBA, banned for doping

Penbugs

ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை

Kesavan Madumathy

I take pride in Indian women athletes but still a long way to go: Sania Mirza

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

5YO dies after hot Sambhar vessel falls on him

Penbugs

தமிழகத்தில் இன்று 5206 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மருத்துவமனையில் இருந்து அமித்ஷா டிஸ்சார்ஜ்

Penbugs

ஐ.டி நிறுவனங்கள் 10 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

Penbugs