அப்பறம் என்ன பா ஒரு மனதா
பெண்குயின் ரிவியூ எழுதிருவோமா..?
டேய் அழக்கூடாது,
அண்ணன பாரு எவளோ அடி
வாங்குனாலும் எப்படி அழுகாம
இருக்கேன்னு,
ஏதும் சேதாரம் இருந்தா உங்க வீட்டு
பிள்ளையா நினைச்சு என்ன எல்லாரும்
மன்னிச்சுடுங்க – ஆரம்பத்திலேயே
சொல்லி வைக்கணும்ல அப்போ தான்
நம்ம உடம்புக்கு எதுவும் சேதாரம் ஆகாது,
சரி ரிவியூக்கு போவோம்
” பெண்குயின் ” – A Film by Eashvar Karthic,
ஆமா, பென்குயின் தான வரும்ன்னு
நண்பர் ஒருத்தர் கேட்டாரு, ஒரு பெண்
பத்தின படம், நம்ம பெண்கள் எல்லாம் “
குயின் ” மாதிரில, Daddy Little Princess
கேள்வி பட்டது இல்லையா அந்த ரகம் தான்,
ஆரம்பமே குறுக்க கட்டைய
போடாதீங்க நண்பரே இருங்க,
ரியல் பென்குயின்ஸ்
குளிர் பிரதேசத்துல வாழும்ன்ற
காரணத்துல கொடைக்கானலுக்கு
கேமராவா தூக்கிட்டு போனாங்களா இல்ல
வழக்கமா “இது மிகவும் அடர்ந்த காடு, இரவு
நேரங்களில் இந்த கொடைக்கானல்
லேக்கை சுற்றியுள்ள காடுகளில் ஒரு
அமானுஷ்ய சக்தி உலாவி வருகிறதுன்னு
யூட்யூப் சேனல்களின் ஏதோ உல்டா
விடியோவை பார்த்து கிளம்பி
போனாங்களான்னு தெரியல,
கொடைக்கானல் லொகேஷன்னு
தெரிஞ்சோனா கேமரா மான் சும்மா
சுத்தி சுத்தி Profile Picture Cover Picture வைக்க
நம்ம பசங்க எப்படி ரோட்ல படுத்து உருண்டு
போட்டோ எடுப்பாங்கலோ அந்த மாதிரி
டிரஸ்ல மண்ணு படுற அளவு தன்னோட
வேலைய சிறப்பா செஞ்சுருக்கார்,
படத்தோட மிகப்பெரிய பலம்ன்னு
சொல்லலாம்,
அப்பறம் நம்ம கீர்த்தி சுரேஷ்,
தேசிய விருது வாங்கிய நடிகையர் திலகம்
அல்லவா தன்னோட பங்க தனியா சிறப்பா
செஞ்சுருக்காங்க,எவனும் எக்கேடு கட்டு
போங்கடா நான் தனியா ஆக்ட்டிங்ல
ஸ்கோப் காட்டுறேன்னு அம்மணி
தன்னோட வேலைய அழகா செஞ்சுட்டு
போயிட்டாங்க, ஆனா நல்லா ஹெல்த்தியா
இருந்தவங்க இந்த படத்துக்காக
ஏன் எடைய குறைச்சாங்கன்றது
புரியாத புதிரா இருக்கு,
சேதுபதி, சிந்துபாத் ல
நடிச்ச லிங்கா ஒரு பக்கம்,
மெஹந்தி சர்க்கஸ்ல நடிச்ச
மாதம்பட்டி ரங்கராஜ் இன்னொரு பக்கம்,
அப்பறம் நம்ம மியூசிக்குக்கு
வருவோம்,ஜிகர்தண்டா தீம் போட்டு
Stone Bench Productions – ன்னு வரப்போ
சிலிர்த்து போய் சில்லறையெல்லாம்
விட்டு எறிஞ்சேன், கடைசில படத்துல
போய் பாத்தா மார்கழி மாசம் பாட
வேண்டிய திருப்பாவை பாடலுக்கு
பதிலா பெருமாள் கோவில்ல உட்கார்ந்து
ஓம் நமச்சிவாய பாடல பாடிட்டு இருக்காரு
இந்த Era – வின் நாயகன்,
சரிப்பா இதெல்லாம் கூட
மன்னிச்சுருவோம்,டைரக்டர் சார் கிட்ட
ஒரு கேள்வி,
சைக்கோ கில்லர் படம்ன்னு
எடுக்க ஸ்டார்ட் பண்ணிட்டீங்க,படமும்
ஆமை ரன்னிங் ரேஸ் போன மாதிரி தான்
திரைக்கதைல போகுது அது ஒரு பக்கம்,
சரி காட்சிகள் நகர்த்தல்ன்னு கூட
வச்சுப்போம்,யாருமே பாத்தா பயப்புடாத
“இவர் சிரிப்பு போலீஸ்” ரகத்துல உள்ள
சார்லி சாப்ளின் கதாப்பாத்திரத்துல
வித்தியாசமா ஒரு வில்லன் கேரக்டர்
வச்சீங்க அதையும் தள்ளி வச்சுடலாம்,
ஆனா மூணாங் கிளாஸ் படிக்குறப்போ
எங்க அம்மா நான் ரப்பர
தொலைச்சுருவேன்னு கட் பண்ணி
பாதியா தான் கொடுக்குறாங்க,
உங்க அம்மா மட்டும் உனக்கு முழு ரப்பர்
கொடுத்துருக்காங்கன்னு ஒரு பொம்பள
பிள்ளை மேல இன்னொரு பொம்பள பிள்ள
பொறாமை படுற புளிப்பு காமெடிய
கொண்டுவந்து “Comparsion” – ன்ற பேருல
இது தான் கொலைக்கான ட்விஸ்ட்ன்னு
வச்சிங்க பார்த்திங்களா டைரக்டர் சார் Hatsoff
சார் Hatsoff, சுகர் பேஷண்ட்டா நானு என்ன
விட்ருங்கடா – ன்ற ஜென் மனநிலைல தான்
உட்கார்ந்து பார்த்தேன்,
தியேட்டர்ல ரிலீஸ் ஆகாம OTT – ல
வந்ததால ஒரு நல்ல விஷயம், பெட்ல
புரண்டுட்டே நேத்து சந்தைல வாங்குன
காக்கிலோ கேரட்,அண்ணாச்சி கடையில
வாங்குன ரெண்டு 50 – 50 பிஸ்கட் பாக்கெட்
ன்னு தின்னுட்டே பாத்தனால கெரகம்
தப்பிச்சேன்,
சரி இதுக்கு மேல ராகம் பாடுனா
நம்ம மேல ராகம் பாடிருவாங்க,
ஆக, ஒரு தடவ பார்க்கலாங்க
ஏதோ டைம் பாஸ்க்கு அவ்வளோதான்,
பெண்குயின் –
ஒரிஜினல் ” பென்குயின் ” போல்
பறக்க முடியாமல் தத்தி தத்தி நடந்து
அவ்வப்போது நீந்திக்கொண்டும்
இருக்கிறது திரைக்கதையில்,
பின்குறிப்பு :
படம் பார்க்கும் போது இரண்டு முறை
பவர் கட் செய்யப்பட்டதால் நான் மிகவும்
மன உளைச்சலுக்கு ஆளானேன்,
: ) ❤️