Coronavirus Editorial News

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை இன்று தொடங்கியது .

கொரோனா பரவல் காரணமாக, இந்த யாத்திரையை தள்ளி வைக்க வேண்டும் என ஒடிசா விகாஸ் பரிஷத் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நிபந்தனைகளுடன் கூடிய‌ அனுமதியை உச்ச நீதிமன்றம் வழங்கியது .

பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் சங்கராச்சாரியர் சுவாமி நிஸ்சாலந்த சரஸ்வதி, ஆலயத்தின் ரத யாத்திரையை நடத்துவதற்கான பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து வழக்கினை விசாரித்த நீதிபதி யாத்திரைக்கு பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் அனுமதி அளித்தார்.

அதன்படி உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளால், இந்த ஆண்டு பொதுமக்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.பூசாரிகள், அதிகாரிகள், போலீசார் என 500 பேர் அளவிலேயே இழுக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நிபந்தனை விதித்துள்ளது. மேலும் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 தேர்களையும் இழுக்கும் 700 பூசாரிகளுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது .

12 நாட்கள் நடைபெறும் ஆலய தேரோட்டத்திற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் உத்திரவாதம் அளித்துள்ளது.

Related posts

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

Penbugs

Sophie Gregoire-Trudeau tested positive for Corona

Penbugs

Vijay Mallya to be flown, lodged in Mumbai on extradition: Report

Penbugs

தமிழகத்தில் இன்று 5735 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5626 பேர் டிஸ்சார்ஜ்.

Penbugs

Lockdown: Manju Warrier helps 50 transgender

Penbugs

I have no sympathy: Holding lashes out Archer for breaking protocol

Penbugs

தமிழகத்தில் இன்று 6045 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Jos Buttler to auction his World Cup final jersey to raise funds

Penbugs

தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Penbugs

COVID patient recovers via plasma therapy

Penbugs

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: பிரகாஷ் ஜவடேகர்

Penbugs