எல்லாருக்கும் தெரிஞ்சது…!
90 கிட்ஸ் எல்லாருக்கும் விஜய் தொலைக்காட்சில வந்த “லொள்ளு சபா” நாலே ஒரு தனி குஜால் தான்.. அதுக்கு முக்கிய காரணம் சந்தானம்..!
அந்த எகத்தாளம்.. நக்கலு.. நிமித்தலு எல்லாமே சந்தானத்தின் உடன்பிறந்த குணாதிசயங்கள்.. சின்னத்திரைல நல்லா கலக்கிட்டு இருந்த இவர சரியான நேரத்துல வெள்ளித்திரையில் அடையாளம் காட்டிய பெருமை சிலம்பரசன் அவர்களையே சாரும்..
மன்மதன்ல தான் அவர் அறிமுகமானார்ன்னு யாவரும் அறிந்த உண்மையாக இருப்பினும்.. அதற்கு முன்னதாகவே “காதல் அழிவதில்லை” படத்தில் STR அவர்கள் சந்தானத்தை சேர்த்து இருந்தார் என்பது கூடுதல் ஆச்சர்யம்..!
எல்லா படத்திலும் நண்பர் கதாபாத்திரத்தில் வந்து பின்னி பெடல் எடுத்து எல்லோரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து விடுவதில் சான்டாவிர்க்கு நிகர் சாண்டாவே..!
இதுவரை சாண்டா பல படங்களில் நடித்து இருந்தாலும்.. சிம்பு அழைத்தால் மட்டும் எந்த வித கேள்விகளும் இன்றி நேரம் ஒதுக்கி வேலையை முடித்து கொடுப்பார் என்பது அவர்களிடையே இருக்கும் நட்பின் பிணைப்பை காட்டுகிறது..
சாண்டா பல காமெடி கதைகளில் சிறந்து விளங்கினாலும் அவர் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது அசாத்திய நடிப்பை காட்டியுள்ளார் என்பது மிகை..
கவுண்டர், செந்தில், வைகை புயல், விவேக் ஆகியோர் அமர்ந்த காமெடி அரசர்களின் அறியாசனையை சந்தானமும் அலங்கரித்தார்…!
நானும் எவ்ளோ நாள் காமெடியநாவே இருக்கிறது.. நானும் டூயட் பாடனும் ல அப்டின்னு சாண்டா எடுத்த அவதாரம் தான் கதாநாயகன்..!
ஏற்கனவே அறை எண் 305ல் கடவுள் படத்துல ஒரு கதாநாயகன் ரோல் நடித்திருந்தாலும் அவர் நடிப்பு வேட்டைக்கு தீனி போட அவர் தேடி கண்டெடுத்த படங்களே “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படித்தான்” “தில்லுக்கு துட்டு” “சக்க போடு போடு ராஜா” “A1”.
இந்த மாதிரி படங்கள் மூலமா வெற்றி தோல்வியை தாண்டி அவர் தன்னை தானே மெருகு ஏற்றி இப்போ வர ஜனவரி 31ம் தேதி அவரோட ரெண்டு படம் சர்வர் சுந்தரம் மற்றும் டகால்டி வெளிவர போகுது..!
சினிமால காமெடி.. நடிப்பு இதை தான்டி அவர் சில படங்களை நட்புக்காக தயாரித்து தானும் சில படங்கள்ல நடிச்சும் உதவியிருக்கார்..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சான்டா..!
Jim Carrey makes a sexist comment at journalist during interview!