சிபிஎல் டி20 போட்டியில் ஜமைக்கா அணியிலிருந்து செயிண்ட் லுசியா அணிக்கு மாறியுள்ளார் பிரபல வீரர் கிறிஸ் கெயில்.
கேபிஎச் டிரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் சிபிஎல் டி20 போட்டியின் அணிகளில் ஒன்றான செயிண்ட் லூயிஸை வாங்கியது. ஆண்டி பிளவர் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நிர்ணயிக்கப்பட்டார்.
தற்போது செயிண்ட் லூயிஸ் அணி, பிரபல வீரர் கிறிஸ் கெயிலைத் தேர்வு செய்துள்ளது. சிபிஎல் போட்டியில் முதல் நான்கு சீஸனில் ஜமைக்கா அணிக்காக கெயில் விளையாடினார். அடுத்த இரு வருடங்களுக்கு வேறு அணியில் விளையாடிய கெயில் மீண்டும் ஜமைக்கா அணிக்கு வந்தார். ஆனால் கடந்த சீஸனில் 10 ஆட்டங்களில் 243 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜமைக்கா அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.
40 வயது கெயில், டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். 2020 சிபிஎல் போட்டி ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 26 வரை நடக்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் போட்டி நடக்கவுள்ள தேதிகளில் மாற்றம் நடக்கும் எனத் தெரிகிறது.
ENG v WI: Holding’s inspiring speech about racism