தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,07,124 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள 260 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-191) மூலமாக, இன்று மட்டும் 80,856 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று மட்டும் 1,809 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 68 ஆயிரத்து 722 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
