தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 6738 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 197 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 22,381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 11,73,439 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!