கேரளத்தை பொறுத்தவரை ரொம்ப மாஸான படங்களை விட அவர்களின் வாழ்வியலை சொல்ற மாதிரி படங்கள்தான் அதிகம் . ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் , நல்ல கதை தேர்வுகள் என எப்பவும் வியக்க வைக்கும் .
சமீபகாலமாக பகத் பாசில் இந்தியாவே திரும்பி பாக்க வைக்கும் ஒரு நடிகராக இருக்கிறார் அவரின் கதை தேர்வுகளும் அதற்கேற்றாற்போல் அமைத்து கொள்கிறார் .
பகத் பாசிலின் ரொம்பவே அலட்டிக் கொள்ளாத ஒரு நடிகன் எந்த கதையா இருந்தாலும் அவ்வளவா கெட்டப் சேஞ்ச் பண்ணாமயே தன்னுடைய முக பாவனைகளால் மிரட்டும் ஒரு ஆள் …!
டிரேன்ஸ் படம் எப்படி இவ்ளோ தைரியமா எடுத்து , ரிலீஸ் பண்ணாங்கனு தெரியல கேரளாவில் கிறிஸ்துவ மக்கள் அதிகம் இருந்தும் இந்த படத்தை அவங்க எடுத்தது பெரிய விசயம் …!
மூட நம்பிக்கை இல்லாத மதங்கள் குறைவு அவ்வாறான மூட நம்பிக்கைகள் விமர்சனத்திற்கு உட்பட்டு தான் ஆக வேண்டும் அதை இந்த படத்தில் நேர்மையா சொல்லி இருக்காங்க 🔥🙏
பகத் முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை மனுசன் மிரட்டி இருக்கான் கண்ணாடி முன்ன கை தட்றது , கூட்டத்திற்கு முன்ன பேசறது , பைபிள் மனப்பாடம் பண்ற சீன் எல்லாமே தீயா இருக்கு…!
பகத்தின் நடிப்பை பத்தி சொல்லனும்னா இந்த சீன் வசனம் போதும் …!
#Trance