Penbugs
Editorial/ thoughtsInspiring

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்..!

ஒருவர் தனது வாழ்வில் 64,000 புத்தகங்களையும் படித்து,ஆசியாவிலே தனிமனித நூலகம் ஒன்று வைத்திருந்தால் அது பேராசான் அண்ணல் மட்டும் தான்!! நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.
விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்.

(Burnaby, Canada) பர்னாபி நகரத்தின் கவுன்சில் ஏப்ரல் 14,2020 ஐ டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சமத்துவ நாள்(DAY OF EQUALITY) என்று அறிவிக்கப்பட்டது.

உலகின் தலைசிறந்த மேதைகளுள் ஒருவரான டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். இந்து மதத்தையும், இந்தியாவில் புரையோடிக் கிடக்கும் சாதிக்கு எதிராகவும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். சாதிய அமைப்பை ஒழிப்பதற்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். இந்து மதத்தையும், வேதங்களை ஆய்வு செய்து, பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

சாதியோ பொருளாதார நிலையோ ஒருவரின் கற்கும் ஆர்வத்தையும் அறிவார்ந்த சாதனைகளையும் தடுத்துவிட முடியாது என்கிற மிகப்பெரும் நம்பிக்கையே அவரது வாழ்க்கை நமக்குத் தரும் முதற் பெரும் செய்தி மற்றும் அவர் தனது மக்களுக்காக அயராது உழைத்ததை காணலாம்.

வாக்களிக்கும் உரிமை(Right to Vote):

பணக்காரர்களுக்கும், வரி செலுத்துவோருக்கும் மட்டுமே வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசியல்-சட்ட சமத்துவத்தை கோருவதற்காக, தேர்தல்கள் சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் கைகளில் ஒரு ஆயுதம் என்று டாக்டர் அம்பேத்கர் கருதினார். எனவே, பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைக் கோருகையில் – பின்னர் தீண்டத்தகாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டார் – குற்றவியல் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கான உரிமையையும் அவர் வலியுறுத்தினார்.

இன்றுள்ள வாக்குரிமை அவர் எழுப்பிய கோரிக்கையே.

நீர்மேலண்மை:

இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர்.
நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்கிற அம்பேத்கரது யோசனை மற்றும் நாட்டின் நீர் மேலாண்மைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நன்றி செலுத்தும் விதிமாக தேசிய நீர் ஆணையம் Ambedkar’s Contribution to Water Resources Development என்கிற ஆவணத்தை 1993ல் வெளியிட்டது.
ஹிராகுட்(Hirakud Dam), தாமோதர்(Damodar Dam)போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.

பொருளாதாரம்:

டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி “The problem of the rupee-It’s orgin and it’s solution.”என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய ரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.1926 Royal Commission on Indian Currency (Hilton Young Commission) recommends the establishment of a central bank to be called the ‘Reserve Bank of India’.

பெண்களின் வாழ்வில் புரட்சியாளர்:

இந்து சட்டத்தில்(Hindu code Bill) பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு, விவாகரத்து உரிமை, சொத்து உரிமை உள்பட பலவற்றை முன்வைத்தார்.

இந்துசட்ட மசோதா,பிற்படுத்தபட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு போன்றவற்றை நிறைவேற்ற நேரு அரசாங்கம் ஒத்துழைக்காத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.பின்னர் நேரு அரசு இந்து சட்ட மசோதாவை மட்டும் நிறைவேற்றியது.
(Backward class) பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 40 ஆண்டுகளுக்கு பிறகு வி.பி சிங் அரசு நிறைவேற்றியது.

தொழாளர் வாழ்வில் புரட்சியாளர்:

தொழிலாளர்கள் தொடர்பாக பல்வேறு நன்மைகளைச் செய்துள்ளார்.
12 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக 1942-ம் ஆண்டு நடந்த 7-வது தொழிலாளர்கள் மாநாட்டில் குறைத்தார்.
மேலும், தொழிலாளர்களுக்கு, விடுமுறை, காப்பீடு, மருத்துவ விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் என்ற அடிப்படை தேவைகளை கொண்டுவந்தார். இந்தியத் தொழிலாளர்களுக்கு அம்பேத்கர் செய்த நன்மைகள்.

மனித சமூகத்தின் மேம்பாடு குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே தன் குழந்தையை வறுமையின் காரணமாக பலி கொடுத்தார்.இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர்.
பாபாசாகேப் விரும்பாத வழிபாட்டு நடைமுறைகளாக மாறிப்போன அவரது பிறந்தநாள் கொண்டாடங்கள்,அவரது நூல்களை படிக்கிற நாளாக மாறுவதுதான் அவருக்கு செய்யும் வாழ்த்து!

Related posts

India hits 100-crore COVID19 vaccine milestone

Penbugs