இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் திருமணம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே பும்ரா, சஞ்சனா திருமணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
பல்வேறு புரளிகளும் உலா வந்த நிலையில் தற்போது தனது திருமண புகைப்படங்களை பும்ரா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவரின் மனைவி சஞ்சனா, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியிருந்தவர். தற்போது தனியார் தொலைக்காட்சியில் விளையாட்டுப் பிரிவு வர்ணனையாளராக உள்ளார்.
https://www.instagram.com/p/CMb2BtxHjgD/?igshid=aev57z1ifdk8
ENG v WI: Holding’s inspiring speech about racism