Coronavirus Editorial News

குடும்ப அட்டைகளுக்கும் மே மாதத்துக்கான பொருள்கள்: இலவச டோக்கன் வழங்கும் பணி நாளை தொடக்கம்

மே மாதத்துக்கான பொருள்களை இலவசமாக வழங்க அனைத்து வகை குடும்ப அட்டைதாரா்களுக்கும் வீடு, வீடாக டோக்கன்கள் வழங்கும் பணி, வெள்ளிக்கிழமை (ஏப். 24) முதல் தொடங்கவுள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு மே மாதத்துக்கான பொருள்களை விலையில்லாமல் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் சஜன்சிங் சவாண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
கூட்டத்துக்குப் பிறகு, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணா்ந்து, அவா்களுக்கு உரிய நிவாரண உதவிகளை ரூ.3,280 கோடியில் வழங்க உத்தரவிடப்பட்டது. அதில், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் விலையின்றி வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில், இன்று வரை 1 கோடியே 89 லட்சத்து ஆயிரத்து 68 குடும்பங்களுக்குப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

மே மாதப் பொருள்கள்: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மே மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் என்று முதல்வா் கே. பழனிசாமி அறிவித்துள்ளாா். நோய்த்தொற்று ஏற்படாத வகையில் அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அவரவா் வீடுகளிலேயே டோக்கன்கள் வழங்கப்படும்.

டோக்கன்கள் வழங்கும் பணியானது வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறும். அந்த டோக்கன்களில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரா்கள், டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் உரிய நியாய விலை கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.

சமூக இடைவெளி அவசியம்: உணவுப் பொருள் வழங்கலுக்கு தமிழக அரசு வரையறுத்துள்ள நடைமுறைகளை பொதுமக்கள் முறையாகக் கடைப்பிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருள்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related posts

தமிழகத்தில் கொரோனா குறைவு?

Penbugs

ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கலாம்

Kesavan Madumathy

Indian Railways to restart Passenger trains from May 12

Penbugs

Rafa Nadal opts out of US Open 2020 due to COVID19 concerns

Penbugs

Paruthiveeran singer Lakshmi Ammal struggles financially, Karthi promises help

Penbugs

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளுடன் பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

Penbugs

Nepal parliament votes on new map that includes Indian territory

Penbugs

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 543 பேர் பாதிப்பு

Anjali Raga Jammy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Confirmed: Lionel Messi asks to leave Barcelona

Penbugs

கொரோனா: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து

Penbugs

Battled suicidal thoughts, depression: Robin Uthappa

Penbugs