Cinema

விண்ணைத்தாண்டி வருவாயா..!

காதலில் வரும் ஈகோ சண்டைகள் வெளிய இருந்து பார்க்கும் நமக்கு வேணா அது நகைப்புக்கு உரியதாக இருக்கும் ஆனால் அந்த காதலில் இருந்து பார்த்தால்தான் அந்த ஈகோவின் உச்சம் என்னவென்று தெரியும் அப்படி சிறுசிறு ஈகோக்களின் தொகுப்புதான் விண்ணைத்தாண்டி வருவாயா ‌…!

கௌதம் ஒரு பேட்டியில் சொன்னது படத்தின் எழுபது சதவீத காட்சிகள் கேண்டிடாக எடுக்கப்பட்டது என்று சிம்புவும் ,திரிஷாவும் பேசும் காட்சிகள் வெறும் மனப்பாட வசனம் இல்லாமல் அந்த சிச்சுவேசனை வைத்து உரையாடலாக எடுக்கப்பட்ட சீன்கள்தான் என்றும் அதனால்தான் என்னவோ அந்த உரையாடல் எப்போதும் சலிக்காத ஒன்றாக உள்ளது ..!

சாதாரணமான ஒருநாளில் மேல் வீட்டுக்கு குடிவரும் ஜெஸ்ஸியைப் பார்க்கும் கார்த்திக் இப்படி கௌதமின் கதாபாத்திரங்களுக்குள் வரும் காதல் மிக இயல்பான ஒரு இடமாகதான் ஆரம்பிக்கும் ..!

கௌதம் படங்களில் காட்டப்படும் காதல்கள் ரியாலிட்டிக்கு நெருக்கமாக இருக்கிறதா,இல்லையா என்பதெல்லாம் எப்போதும் விவாதத்திற்கு உள்ளான ஒன்று ஆனால் எனக்குத் தெரிந்து கௌதமின் படங்களில் காட்டப்படும் காதல்கள் எல்லாமே ஒரு மேஜிக்தான் . ஏதாவது ஒரு இடத்தில் நம்மை ” அட” சொல்ல வைப்பதுதான் கௌதமின் மிகப்பெரிய பிளஸ் ….!

ரகுமான் – கௌதம் காம்பினேசனில் முதல் படம் எல்லா பாட்டும் ஹிட் , சிம்பு -திரிசா கெமிஸ்ட்ரி,தாமரையின் வரிகள் , கௌதமின் வசனங்கள் , மனோஜ் பரமஹம்சாவின் கேமரா என இஞ்ச் பை இஞ்ச் ரசிக்க வைச்ச ,ரசிக்க வைச்சிட்டு இருக்கிற ,இன்னும் ரசிக்க வைக்க போகிற படம் ….!

படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் டாப் கிளாஸ் :

காதலை தேடிக்கிட்டு போக முடியாது,
அது நிலைக்கணும்,
அதுவா நடக்கணும்,
நம்மள போட்டு தாக்கணும்,
தலைகீழா போட்டு திருப்பணும்,
எப்பவுமே கூடவே இருக்கணும்,
தலைகீழா போட்டு திருப்பணும்,
கூடவே இருக்கணும்,
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது
நான் உன்ன பார்த்த அப்ப எனக்கு ஆன மாதிரி

உலகத்துல எவ்வளோ பொண்ணு இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணேன் ..!

பர்ஸ்ட் லவ் ஜெஸ்ஸி ,
அவ்ளோ ஈஸியாலாம்
விட்டுட முடியாது…!

“நான் இந்தப் பக்கம் உட்காந்திருக்கேன். தாங்க முடியல அங்க உன்கூட ஒரே சீட்ல உட்காரணும் போல இருக்கு”

“இந்த உலகத்துல இருக்கிற எல்லாரையும் தங்கச்சியா ஏத்துக்கிறேன் உன்னை தவிர ”

” அவங்க யாரும் என் கண் வழியா பாக்கல போல ”

படத்துல ரொம்ப ரசித்தது ரகுமானின் பின்னணி இசை அதுவும் ஒரு இடத்துல இனிமே நாம பிரெண்ட்ஸா இருப்போம் என்ற வசனம் தொடங்கும் அப்ப கரெக்டா முஸ்தபா முஸ்தபா ஹம்மிங் போட்டு இருப்பார் மனுசன் , அடுத்து மன்னிப்பாயா பாட்டுல திருக்குறள் சேர்த்தது என படத்தின் வெற்றிக்கு ரகுமானின் பங்கு ரொம்பவே அதிகம் ..!

பத்து வருசம் மட்டுமில்லாமல் இன்னும் எத்தனை வருசம் ஆனாலும் விடிவி ‌ஏதோ ஒரு வகையில் கொண்டாடப்பட்டு கொண்டே இருக்கும்..!

Related posts

Malavika Mohanan’s bike racing video

Penbugs

Vishnu Vishal- Jwala Gutta ties knot

Penbugs

Suriya uncontrollably cries as a girl narrates her story!

Penbugs

Golden Globes Awards 2021 Winners List

Lakshmi Muthiah

Lockdown: Shobana and her students dance their heart out

Penbugs

Maari 2’s Rowdy Baby hits 1 Billion views on YouTube

Penbugs

மைக்கேல் | குறும்படம்

Kesavan Madumathy

We don’t get paid for singing in films: Neha Kakkar on Bollywood songs

Penbugs

Disappointed about one thing: Rajinikanth after meeting today

Penbugs

நடிகர் விவேக் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல: மருத்துவமனை விளக்கம்

Kesavan Madumathy

Kangana Ranaut to play J Jayalalithaa in biopic Thalaivi

Penbugs