Penbugs
Editorial News

சென்னையில் இன்று ஒரே நாளில் 30 பேர் கொரோனாவில் இருந்து நலமடைந்தனர் …!

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் நலம் பெற்றனர். நலம் பெற்றவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அனைவரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியோடு இல்லம் திரும்பினர்.உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் இது வரை 21 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை 13,387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 437 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 1,267 பேர் பாதிக்கப்பட்டு 15 பேர் பலியாகி இருக்கின்றனர். கேரளாவில் பலரும் விரைந்து நலம் பெற்று வருகின்றனர்

இதுபோல் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 பேர் நலம் பெற்றனர்.சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 350 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டிருந்தது. இதில் 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை வழங்கி வருகின்றனர்.இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 30 பேரும் 16 நாள் சிகிச்சைக்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர்களுக்கு தொடர்ந்து 15 நாட்கள் மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 15 நாட்கள் தீவிர காண்காணிப்பில் இருந்த இவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து 30 பேரும் அவர்களின் வீடுகளுக்கு செல்ல மருத்துவக்குழுவினர் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து 30 பேரும் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.உற்சாகத்துடன் வந்தனர்கொரோனா சிறப்பு வார்டை விட்டு வெளியே வந்த அனைவரும் முகக்கவசம் அணிந்தவாறு உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் வெளியே வந்தனர். இவர்கள் அனைவரும் தங்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினருக்கு கண்ணீர் மல்க நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.30 பேரையும் வாகனங்கள் மூலம், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி பொறுப்பு முதல்வர் நாரயணபாபு ஆகியோர் அவர்களின் வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தனர். அவர்களுக்கு பழங்கள், பிஸ்ட்கள், ஜூஷ் ஆகியவை மருத்துமனை மற்றும் தொப்புள்கொடி தொண்டு நிறுவனம் தரப்பில் வழங்கப்பட்டன.மேலும் மருத்துவமனையில் உள்ள 65 பேரின் உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.இறைவனை பிரார்த்தித்தோம்இதுகுறித்து பேசிய கொரோனா பாதித்த நபர் கூறுகையில், “மருத்துவமனை போல இல்லாமல் சிறப்பாக மருத்துவக்குழுவினர் பார்த்துக்கொண்டனர். இந்த பாதிப்பு வேறு யாருக்கும் பரவக்கூடாது என இறைவனை பிரார்த்தித்தோம். மருத்துவர்கள், செவிலியர்கள் ஒத்துழைப்பால் நாங்கள் பூரண குணமடைந்துள்ளோம். கைகளை சுத்தமாக கழுவினாலே நம்மை பாதுகாத்துக் கொள்ளாலாம்”, என்றார்.இதுகுறித்து மருத்துவமனை பொறுப்பு முதல்வர் நாரயணபாபு கூறுகையில், “கொரோனா தொற்று பாதித்தவர்களை எங்களது சகோதரர்களை போல பார்த்துக் கொண்டோம்” என்றார்.

Related posts

Indian army: Government sanctions permanent commission to women officers

Penbugs

Saxophone wizard Kadri Gopalnath passes away

Penbugs

Sushant Singh’s death: CBI files FIR, names Rhea Chakraborty as accused

Penbugs

Section 377 verdict

Penbugs

George Floyd death: 3 more cops to be charged for the murder

Penbugs

Hyderabad Vet murder case: All four accused shot dead

Penbugs

A 96-year-old World War II veteran becomes Italy’s oldest student

Penbugs

Breaking: Lin Dan announces retirement

Penbugs

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை

Penbugs

பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

Penbugs

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

Kesavan Madumathy

Corona scare: Ronaldo quarantined after his Juventus teammate tested positive

Penbugs