Editorial News

பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது ரிசர்வ் வங்கி..!

கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

மும்பையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது. வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது; இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால். கரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாக தயாராக உள்ளது. கரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம்.

  • கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது.

  • உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது.

  • கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

  • மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது

  • 2020-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது.

  • இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37%ஆக அதிகரித்துள்ளது.

  • கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது.

  • உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

  • இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது; இது ஜி-20 நாடுகளில் அதிகம்.

  • கொரோனா பரவல் காரணமாக நாட்டின் மின்சார தேவை 20% முதல் 25% வரை குறைந்துள்ளது.

  • ஆட்டோ மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது.

  • கொரோனாவுக்கு எதிரான போருக்கு ரிசர்வ் வங்கி முழுமையாக தயாராக உள்ளது.

  • தொழிற்சாலைகள் இயங்காததால் நாட்டின் மின்சாரத் தேவை 25 சதவீதம் வரை குறைந்துள்ளது.

  • ஊரடங்கு காலக்கட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது.

  • சிறு, குறு தொழில்துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • ரிவர்ஸ் ரெப்போ 0.25% குறைப்பு: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

  • கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • மாநிலங்களுக்கு 60 சதவீதம் கூடுதலாக நிதி உதவி . அதாவது அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம்.

  • வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • பங்குச் சந்தை தங்குதடையின்றி செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • நாட்டில் பணப்புழக்கம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • வங்கிகள் தாராளமாக கடன் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • நாட்டில் 91 சதவீத ஏ.டி.எம் மையங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

  • ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை வங்கிகள் சிறப்பாக செய்து வருகின்றன.

  • ஜப்பான், ஜெர்மனியின் ஒட்டுமொத்த பொருளாதார அளவிற்கு உலகம் முழுவதும் சரிவு இருக்கும். ஜி-20 நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதம் அதிகரிக்கும் என உலக பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியகம் கணித்துள்ளது.

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறிய ஏற்றம் தென்படுகிறது.

  • நாட்டின் பொருளாதாரத்தில் கரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.

  • தற்போதைய பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து ரிசர்வ் வங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

  • வங்கிகளின் வழக்கமான சேவைகள் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றன.

  • 150 ரிசர்வ் வங்கி பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  • கரோனாவிற்கு எதிராக போராடும் பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றி.

Related posts

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

Social Media unites Nanganallur locals as residents help themselves in pond cleanup!

Penbugs

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

Penbugs

Trump to ban Chinese airlines from flying to US

Penbugs

சென்னை ஈசிஆர் முட்டுக்காட்டில் நடிகை குஷ்பு கைது

Penbugs

Four minor boys rape speech-impaired woman

Penbugs

Kovilpatti Kadalaimittai gets GI tag

Penbugs

Indian army: Government sanctions permanent commission to women officers

Penbugs

Corona Virus: Government launches WhatsApp chatbot

Penbugs

வழக்கறிஞர்களுக்கு புதிய சீருடை!!

Penbugs

ஏப்ரல் 29ல் வெளியாகும் ஓப்போ ‘ஏ92’ – 6 கேமராக்கள்.. 5ஜி நெட்வொர்க்

Penbugs

Breaking: Olympics to be postponed to 2021, says IOC member

Penbugs