Coronavirus

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 21,381 பேர் உள்ளனர். அரசுக்கண்காணிப்பில் 20 பேர் உள்ளனர். கண்காணிப்பு முடிந்தவர்கள் எண்ணிக்கை 85,253 ஆகும்.

மாவட்ட வாரியாக சென்னையில் அதிகபட்சமாக ஒரு நாளில் மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்தம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக உள்ளது. கோவையில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் மொத்தம் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. திண்டுக்கலில் 5 பேருக்கும், நெல்லையில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

COVID19: 84 people working at Raj Bhavan tested positive

Penbugs

மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

இ பாஸ் தளர்வுகள் மேலும் அறிவிப்பு

Penbugs

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

நடிகை ஐஸ்வர்யா ராய் – மகள் ஆராத்யா இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,037 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் – தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Penbugs

Mulugu MLA Seethakka walks 10 km to distribute essentials to tribes

Penbugs

BCCI to donate 51 crores to PM CARES fund

Penbugs

உலக தலைவர்களில் கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்

Penbugs