தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சூழலில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடலின் போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாகவும், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.
தமிழகத்திற்கு அதிகளவில் ரேபிட் கிட் டெஸ்ட் கருவியை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல் அமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று, கூடுதல் ரேபிட் கருவி வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
தமிழகத்தில் நேற்று மட்டும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.
Jofra Archer talks about unfair criticism and racist replies during lockdown