Coronavirus

மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் : ஸ்டாலின்

ரேஷனில் அரிசி கார்டு வைத்து இருப்பவர்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: ரேஷனில் அரிசி கார்டு வைத்து இருப்பவர்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் . சுங்கசாவடிகளை திறந்து சுங்க கட்டணத்தை வசூலிப்பது மனிதநேயமற்ற செயல். மத்திய அரசு இதனை நிறுத்த வேண்டும். துப்பபுரவு பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும்.

பத்திரிகையாளர்களுக்கு போர்கால அடிப்படையில் கொரோனா சோதனை செய்யப்படபட வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது வேதனையான விசயம். ஊரடங்கு முடியும் வரையில் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்க்க வேண்டும். அரசு உட்பட அனைத்து தரப்பினரும் செய்திகளை மின்னஞ்சலில் அனுப்புவது மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

அம்மா உணவகத்தை வைத்து அதிமுக அரசியல் நடத்தாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மா உணவகம் அதிமுகவினரின் வசம் தந்தது மோசமான செயல்.அம்மா உணவகத்தை அதிமுகவினருக்கு மட்டும் குத்தகைக்கு விட்டது போல் தாரை வார்க்கப்பட்டுள்ளது சரியல்ல. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

Kesavan Madumathy

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 5626 பேர் டிஸ்சார்ஜ்.

Penbugs

தமிழகத்தில் இன்று 6047 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Pune man wears Gold Mask worth Rs 2.89 Lakhs

Penbugs

Lockdown: Shobana and her students dance their heart out

Penbugs

Spraying disinfectants in open don’t kill corona, can even be harmful: WHO

Penbugs

Corona outbreak: Sachin Tendulkar donates 50 Lakhs

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா உறுதி!

Penbugs

CPL 2020: Fabian Allen ruled out after missing his flight

Penbugs

சென்னை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs