Cinema

The Journey of Solo (Title Poem)

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம் என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு,

” The Journey of Solo – Title Poem | Bejoy Nambiar ”

1) நீர் – ( World of Shekhar )

அன்பே
ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள்
நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள்
கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள்
என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே
உன் மனதால் இறுக அணைத்துக்கொள்
அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை

2) காற்று – ( World of Trilok )

யுகாந்திரங்களின் கோபம்
யுகாந்திரங்களின் இறுக்கம்
யுகாந்திரங்களின் பொறுமை
யுகாந்திரங்களின் தனிமை
வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று
இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..?
காலத்தின் புயலில் உதிரும்
ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..?
அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை

3) நெருப்பு – ( World of Shiva )

வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன
குருதியின் சுவடுகளில் சாம்பல் படுகிறது
குற்றத்தின் தண்டனைகளை தருபவர்கள் யாருமில்லை
பாவத்தின் சுமைகளை பகிர்பவர்கள் எவருமில்லை
வீழ்ச்சியின் தனிமையில் உனக்கு புகழிடமில்லை

4) நிலம் – ( World of Rudra )

என் அன்பே
இந்த நிலத்தின் மீது தான் நம் உடல்கள் தழுவிக்கொண்டன
இந்த நிலத்தின் மீது தான் நம் பிரிவின் சுவடுகள் பதிகின்றன
நான் சூரியன் விழும் திசையில் என் குதிரையை வேகமாய் செலுத்திக்கொண்டு போகிறேன்
தூங்க அஞ்சுகிற இரவுகளில் உன் கண்ணீருடன் நான் உரையாடிக்கொண்டு இருக்கிறேன்
இந்த நாளில் உன்னை கடந்துவிடும் அற்புதம்
எப்படியும் நிகழ்ந்து விடும் தானே
இழப்பின் தனிமையில் நிற்க உனக்கு நிழலில்லை

#SoloTitlePoem ❤️

Related posts

Dil Bechara: An intense as well as emotional ride

Penbugs

Actor Vijay’s selfie with fans most retweeted in Twitter in 2020

Penbugs

என் நெஞ்சில் குடியிருக்கும் தளபதி

Shiva Chelliah

Prithviraj Sukumaran tests negative for COVID19, to be in quarantine for a week

Penbugs

Vemal volunteers as sanitary worker to help his village

Penbugs

Sometimes aka Sila Samayangalil

Penbugs

எஸ்.பி.பி. பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் – நடிகர் சல்மான்கான்

Penbugs

COVID19: Man rescued by Sonu Sood, names his shop after him

Penbugs

கொரோனா மற்றும் பிரபலங்கள் மரணம் குறித்து சிம்பு

Penbugs

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த அவர்களின் மறைவுக்கு நடிகர் சிலம்பரசன் இரங்கல்

Anjali Raga Jammy

Friends Co-creator gives update on reunion

Penbugs

Daniel Radcliffe responds to Jk Rowling’s anti-trans tweets

Penbugs