Penbugs
Cinema

கௌதமை அறிந்தால்..!

சினிமா பல இயக்குனர்கள் வந்து வந்து சென்று கொண்டிருக்கும் ஒரு களம். வெற்றியும் வரும் , தோல்வியும் வரும் என்பதை தாண்டி சில இயக்குனர்களுக்கு மட்டுமே அவர்களின் பெயரில் பிராண்டிங் என்பதை ரசிகர்கள்‌ தருவார்கள். இது ஜிவிஎம் டைப் மூவிஸ் என ரசிகர்கள் பேசும் அளவிற்கு தனக்கென்று ஒரு முத்திரையை பதித்தவர் கௌதம் …!

1997ஆம் ஆண்டு மின்சாரக் கனவு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்…!

முதல் படத்தில் மாதவன்,ரீமாசென் மற்றும் அப்பாஸை வைத்து எடுக்கிறார். இப்படம் 2001 ஆம் ஆண்டு மின்னலே தலைப்பில் திரைக்கு வந்தது. படத்தின் பாடல்களும் , திரைக்கதை அமைத்த விதமும் படத்தை இளைஞர்களிடையே கௌதமை எளிதாக கொண்டு சென்றது ..!

2003ல் காதலும் ஆக்சனும் கலந்த காக்க காக்க படத்தை இயக்கினார். ஒரு என்கௌன்டர் பற்றிய கட்டுரையை படித்து எழுந்த எண்ணத்தால் என்கௌன்டர் செய்யும் ஒரு போலிஸ் அதிகாரியின் வாழ்க்கை , அவருக்கு வரும் இடையூறு என அனைத்தையும் பதிவு செய்யும் படி எடுக்க நினைத்தப் படமே காக்க காக்க. ஒரு நிஜ போலிஸ் ஆபிசராக சூர்யாவை உடல் ரீதியாகவும் , மனதளவிலும் காட்டி இருப்பார்.

மாணவியின் மீது ஆசிட் கொட்டும் சீன் , என்கவுண்டர் சீன் என எல்லாமே அதிரி புதிரியாக எடுத்து அசத்தினார் கௌதம்.!

படத்தின் மிகப்பெரிய பலம் அவரின் வசனங்கள் :

அன்புச்செல்வன்: “ஏன்… ?
நான் யூத்தா ஜாலியா இருக்க ஆள் கிடையாது. நான் ஒரு போலீஸ் ஆஃபீசர் என்னை சுத்தி இருக்கவங்களையும் அது பாதிக்கும். உனக்கும் எனக்கும் ஒரு ஆறு வயசு வித்தியாசம் இருக்கு… why me?”

மாயா: It’s a girl thing. சொன்னா உங்களுக்குப் புரியாது. ஒரு பொண்ணா இருந்து பாருங்க…!

இந்த மாதிரி வசனங்களை அங்கு அங்கு போட்டு ரசிக்க வைத்து இருப்பார்..

சத்யா படத்தை பார்த்து தனது கையில் காப்புடன் அலைந்த கௌதமிற்கு அவரையே இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது, காதல் கொஞ்சம், ரொமான்ஸ் கொஞ்சம் சேர்த்து உருவாக்கப்பட்ட ஆக்சன் திரில்லர் படம் தான் வேட்டையாடு விளையாடு…!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களுக்கான மாஸ் ஓபனிங் சீனில் இன்று வரை டாப் டென்னில் இருக்கும் ஒரு சீன் வேட்டையாடு விளையாடு படத்தின் ஓபனிங் சீன் ..!

ராகவன் கண்ணு வேணும்னு கேட்டியாமே என்று வசனம் பேசிக் கொண்டு கமல் நடித்த நடிப்புக்கு கோடம்பாக்கமே மிரண்டு போனது …!

கௌதமின் முதல் மூன்று தமிழ் படங்களுமே விமர்சன மற்றும் வியாபார ரீதியாக பெரிய வெற்றி படங்கள் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த ஒரு இயக்குனர்…!

போலிஸ் டைரக்டர் என்ற முத்திரை வரும் போது தனது பாணியை காதல் பக்கம் திருப்பினார் . பச்சைக் கிளி முத்துச்சரம் சரியாக போகாத நேரத்தில் அவரின் தந்தையும் இறந்து விட தனது தந்தைக்கு ஒரு அஞ்சலி செலுத்தும்விதமாக தனது வாழ்க்கையை தழுவி அவர் எடுத்த படம் வாரணம் ஆயிரம்..!

மேக்னாவுக்காக எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து, அமெரிக்கா கிளம்பி போய் சந்திக்கிறான். ஒரு மாலைவேளையில் அவளும் அவனுடைய காதலுக்கு சம்மதம் சொல்கிறாள். ஆனால், திடீரென ஒரு குண்டு வெடிப்பு, மேக்னா இறப்பை கண்முன் பார்க்கிறான். அந்த இழப்பு அது கூட்டி செல்லும் பாதை கடைசியில் அதிலிருந்து அவனை இன்னொரு காதல் வந்து மீட்டெடுக்கிறது இவ்ளோதான் கதை ஆனால் அதை கௌதம் படமாக்கிய விதமும் , அவரின் எழுத்தும் படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது..!

படத்தில் நிறைய சீன் ரசிக்க வைக்கும் எனக்கு பிடித்த சீன் :

I fall in love with you, Meghna. கேவலமா நினைக்காத உண்மையிலேயே. உன்னை பாத்தவுடனேயே bounding heart beat , இளையராஜா background score. வெள்ள டிரஸ் போட்ட பொண்ணுங்க,

” எங்க அப்பாக்கு எங்க அம்மா பாத்த உடனே ஆன மாதிரி ”

இதை விட ஒரு லவ் பிரபோசல் கியூட்டா இருக்கவே முடியாது அப்படி ஒரு எழுத்து அது…!

கௌதமை இதுக்கு அப்பறம் படமே எடுக்க வேணாம் முடிவு எடுத்தா கூட அவரின் சினிமா வாழ்க்கைக்கு இரண்டு படம் போதும் ஒண்ணு வாரணம் ஆயிரம் இன்னொன்று “விண்ணை தாண்டி வருவாயா

இந்த படத்தை பத்தி பேச ஆரம்பிச்சா பேசிட்டே போகலாம் முதல் படம் ரகுமானோடு எல்லா பாட்டும் ஹிட் , சிம்பு ,திரிசா கெமிஸ்ட்ரி என இஞ்ச் பை இஞ்ச் ரசிக்க வைச்ச ,ரசிக்க வைச்சிட்டு இருக்கிற ,இன்னும் ரசிக்க வைக்க போகிற படம். படத்தின் ஒவ்வொரு பிரேமும் அப்படி இருக்கும் …!

காதலை தேடிக்கிட்டு போக முடியாது,
அது நிலைக்கணும்,
அதுவா நடக்கணும்,
நம்மள போட்டு தாக்கணும்,
தலைகீழா போட்டு திருப்பணும்,
எப்பவுமே கூடவே இருக்கணும்,
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது
நான் உன்ன பார்த்த அப்ப எனக்கு ஆன மாதிரினு
பேசிட்டே அந்த கிளைமேக்ஸ் அப்படியே லாங் ஷாட்ல திரிசா ,சிம்புவின் வாய்ஸ் ஓவர் கரெக்டா ரகுமானின் மன்னிப்பாயா பிஜிஎம் தமிழ் சினிமாவில் காதல் படம்னா விடிவி இல்லாம போகாது என்ற அளவிற்கு ஒரு கௌதமின் அழகிய கவிதை விடிவி …!

அஜித்துடன் தொடக்கம் முதலே படம் பண்ணும் வாய்ப்பு வந்து அது ஏதோ காரணங்களுக்காக நழுவ பின்னர் அவர்களின் கூட்டணியில் வந்த படம் என்னை அறிந்தால் ‌, அஜித் சொன்ன வார்த்தை கௌதம் நான் உங்க படத்துல இருக்கனும் எனக்காகலாம் எதுவும் பண்ணாதீங்க என சொல்ல கொஞ்ச காலம் காணமால் இருந்த கிளாசிக் நடிகர் அஜித்தை மீண்டும் ரசிகர்களுக்கு கொண்டு வந்தார் கௌதம் ..!

கௌதமின் பெரிய பிளஸ் எந்த இசையமைப்பாளரோடு வேலை செய்தாலும் மொத்த ஆல்பத்தையும் ஹிட் அடிக்க தெரிந்த ஒரு நல்ல இசை ரசிகன் .
ராஜாவுடனும் ஹிட் ,ரகுமானுடனும் ஹிட் ,ஹாரிஸுடன் பல ஹிட் , தர்புக் சிவாவோடும் அனைத்து பாடல்களும் ஹிட் அதுதான் கௌதமின் பெரிய மேஜிக்‌‌…!

மேல்தட்டு மக்களை மட்டும் காட்டுகிறார் ,படம் முழுக்க ஆங்கில வசனத்தை வைக்கிறார் , என பல விமர்சனங்கள் வைக்கப் பட்டு கொண்டே இருந்தாலும் கௌதமிற்கு என்று ஒரு கூட்டம் எப்போதும் அவருக்காக காத்து கொண்டிருக்கிறது …!

தன் மீதான விமர்சனங்களுக்கு அவரின் பதில் எப்போதும்

என்னுடை கம்போரட் ஜோனில்தான் நான் படம் எடுக்கிறேன் ஆனா அதுவே ரொம்ப கஷ்டமான விசயம்தான் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரியான படம் என்னால் தர முடியாது என்னுடைய எழுத்திற்குதான் ஹீரோ வரனுமே தவிர ஹீரோவின் கமர்ஷியல் வேல்யூக்கு எனக்கு எழுத வராது என்ற அவரின் பதில் அவரின் திறமைக்கும் , சினிமா மீது அவர் கொண்ட காதலுக்கும் சான்று …!

Related posts

வித்யாசாகர் ஒரு வித்தைக்காரன்..!

Penbugs

விண்ணைத்தாண்டி வருவாயா..!

Penbugs

சண்முக ராஜா மிஷ்கின்!

Kumaran Perumal

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs

கார்த்திக் டயல் செய்த எண்!

Shiva Chelliah

காதலே காதலே | 96

Kesavan Madumathy

என்னை அறிந்தால்!

Shiva Chelliah

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துருவ நட்சத்திரம்..!

Penbugs

| 24 – A Vikram Kumar’s Sci – Fi Theory |

Shiva Chelliah

Why I loved ’96

Penbugs

Veteran actor-director Visu passes away

Penbugs