ஐ.சி.சி.,யின் ‘எலைட் பேனல்’ குழுவில் இடம் பெற்ற இளம் அம்பயர் ஆனார் இந்தியாவின் நிதின் மேனன்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 2020-21ம் ஆண்டுக்கான புதிய ‘எலைட் பேனல்’ அம்பயர் பட்டியல் வெளியானது. இதில் இங்கிலாந்தின் நைஜல் லாங்கிற்குப் பதில் இந்தியாவின் நிதின் மேனன் 36, சேர்க்கப்பட்டார்.
22 வயதில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிய நிதின் மேனன், 23 வயதில் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) சீனியர் அம்பயர் பட்டியலில் இடம் பெற்றார். இதுவரை 3 டெஸ்ட், 24 ஒருநாள், 16 ‘டுவென்டி-20’ போட்டிகளில் பணியாற்றிய இவர், ஐ.சி.சி., ‘எலைட் பேனல்’ பட்டியலில் இடம் பெற்ற இளம் அம்பயர் ஆனார்.
இதற்கு முன் இங்கிலாந்தின் மைக்கேல் கப், 40 வயதில் இடம் பெற்றதே அதிகமாக இருந்தது. தவிர, இந்தியாவின் வெங்கட்ராகவன், சுந்தரம் ரவிக்குப் பின் இதில் இடம் பெற்ற மூன்றாவது இந்தியர் ஆனார் நிதின் மேனன்.
Vale, Professor Deano | Dean Jones