இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங் மனோகர், பின்னர் ஐசிசி உறுப்பினராகி, தலைவராக பொறுப்பேற்றார்.
இரண்டு ஆண்டு கால பதவிக்காலம் முடிந்த பின்னர், மேலும் இரண்டரை ஆண்டு காலம் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது நான்கரை ஆண்டு கால பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனால் இன்று ஐசிசி தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றார்.
இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் துணைத் தலைவர் இம்ரான் கவாஜா தேர்தல் நடைபெறும் வரை தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்ததால் சஷாங் மனோகர் விலகியுள்ளார்.
அடுத்த வாரம் தலைவர் தேர்தலுக்கான நடைமுறை குறித்து ஐசிசி அறிவிக்கும் எனத் தெரிகிறது.
Shoaib Malik guides Jaffna to become Inaugural Champions