Coronavirus

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

இந்தியாவின் முதலாவது உள்நாட்டு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் சோதனையை நடத்த ஐசிஎம்ஆர் தேர்ந்தெடுத்துள்ள 12 நிறுவனங்களில் ஒன்றான டெல்லி எய்ம்சில், ஐந்து பேருக்கு முதற்கட்ட சோதனை இன்று துவக்கப்படுகிறது.

டெல்லி எய்ம்சில் ஆரோக்கியமான 100 நபர்களிடம் முதற்கட்ட சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க உள்ளவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்து கொண்டிருப்பதாவும், எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் தடுப்பூசி சோதனைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் பத்து பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு அதில் கிடைக்கும் முடிவுகளை எய்ம்ஸ் மருத்துவமனையின் நெறிமுறை குழுவினர் ஆராய்ந்த பின்னர் எஞ்சியவர்களுக்கு சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

இதனிடையே தடுப்பூசி சோதனைக்கு தாமாக முன்வந்துள்ள 3500 பேருக்கு நீரிழிவு, ரத்தகொதிப்பு, சிறுநீரக நோய்கள், இருதய-கல்லீரல் பிரச்சனைகள் உள்ளனவா என சுமார் 50 வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டு அவர்கள் சோதனைக்கு தகுதியானவர்களாக இருப்பது உறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் துணையுடன் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

Related posts

கர்நாடகாவில் பெங்களூரு உள்பட அனைத்து இடங்களிலும் முழு ஊரடங்கு நீக்கம் : எடியூரப்பா

Penbugs

Google maps to show information about COVID19 cases in your area

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

TN recruits 530 doctors, to deploy 200 ambulances

Penbugs

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படக் கூடும்: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு-தமிழக அரசு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5667 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Despite price increase, Kamalathal continues sell Idli at Re 1 per piece

Penbugs

Lockdown: Shobana and her students dance their heart out

Penbugs

COVID-19: Chennai Corporation’s containment plan

Penbugs

தமிழகத்தில் இன்று 5742 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

இன்று ஒரே நாளில் 5295 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment