Editorial News

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.177 கோடிக்கு மதுபானம் வாங்கிய மது பிரியர்கள்

டாஸ்மாக் கடைகள் இன்று செயல்படாது என்பதால் நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 177 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, சேலம், கோவை ,மதுரை என்ற மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு மது விற்பனையானது நேற்று ஒரேநாளில் 177 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளது.

இன்று தமிழகம் முழுவதுமாக எந்தவித தளர்வும் இன்றி கடும் கட்டுப்பாட்டுடன் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதே மதுபானங்கள் விற்பனைக்கு காரணமாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. ஊரடங்கு நாளில் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை நேற்றே மதுப்பிரியர்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

நேற்று ஒரு நாள் மட்டும் 177 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. மது விற்பனையில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 40.75 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது நடைபெற்றுள்ளது. திருச்சி மண்டலத்தில் 40.39 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 39.40 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 35.90 கோடி ரூபாய்க்கும் , சென்னை மண்டலத்தில் 20.82 கோடி ரூபாய்க்கும் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related posts

2020 Tokyo Olympics: Indian Quotas earned complete list

Penbugs

Varalaxmi Sarathkumar distributes food to 1600 migrant workers

Penbugs

Man files case on Google maps for ruining his marriage life!

Penbugs

Govt blocks file sharing website WE Transfer due to security reasons

Penbugs

‘Simplicity’ Newsportal founder booked under Epidemic Diseases Act

Penbugs

Cristiano Ronaldo scores his 100th goal for Portugal

Penbugs

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை

Penbugs

Corona Outbreak: 2 new cases in Delhi and Telangana

Penbugs

Padma Awardees | Complete List | 2020

Anjali Raga Jammy

Let’s CELEBRATE RESPONSIBLY!

Penbugs

Corona Scare: French Open postponed to September

Penbugs

Leave a Comment