Coronavirus

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

முதலமைச்சர் உத்தரவின் பேரில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சிறுவில்வம், திப்பிலி வேர், தலமூலம் உள்ளிட்ட 17 மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மருந்தான இந்துகாந்த கஷாயம், கடுக்கய் உள்ளிட்ட 27 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அகஸ்திய ரசாயனம் மற்றும் வெண்பூசணி உள்ளிட்ட 11 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் கூஷ்மாண்ட ரசாயனம் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இவற்றை காலை மற்றும் இரவு என இருவேளை சாப்பிட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும்.

இம்மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத சிகிச்சை பிரிவுகளில் எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

Related posts

“India’s attack on China”: PM Modi quits China’s Social Media App Weibo

Penbugs

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

COVID19: Bengaluru man helps domestic worker to start her own food business

Penbugs

Corona outbreak: Phoenix mall employee tested positive

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1982 பேருக்கு கொரோனா உறுதி!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Sonu Sood takes responsibility of three orphan children

Penbugs

தமிழகத்தில் இன்று 3924 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

அன்புள்ள பிரதமர் மோடிக்கு.. மன்மோகன்சிங் கடிதம்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சிட்டு..!

இன்று ஒரே நாளில் 5723 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment