Cinema

வெளியானது பிஸ்கோத் பட டிரைலர்

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள பிஸ்கோத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் சந்தானம் நடிப்பில் டகால்டி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் பிஸ்கோத்.

இதனை ஜெயம் கொண்டான், பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர். கண்ணன் இயக்கியுள்ளார்.

சந்தானத்திற்கு ஜோடியாக ஏ1 படத்தில் நடித்த தாரா அலிஷா மற்றும் சுவாதி முப்பலா நடித்துள்ளனர். மேலும் சௌகார், ஜானகி, ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தை மசாலா பிக்ஸ் மற்றும் எம். கே. ஆர். பி. புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில் சந்தானம் பல கெட்டப்களில் நடித்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லரில் பாகுபலி, 300 ரைஸ் ஆஃப் எம்பையர், பில்லா உள்ளிட்ட பல்வேறு பட கெட்டப்களில் தோன்றும் சந்தானம் தனக்கே உரிய டைமிங் கலாய்கள் மூலம் எதிர்பார்ப்புகளை எகிர செய்துள்ளார். மேலும் கொரோனா குறித்து முன்பே கணித்தது போல, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் நகைச்சுவை பாணியில் வசனங்கள் தெறிக்கின்றது.

Related posts

Actor Savi Sidhu works as security now!

Penbugs

Rakul Preet Singh tested positive for COVID19

Penbugs

Nani’s Gang Leader | Tamil Review

Kesavan Madumathy

Vaanam Kottatum Teaser is here!

Penbugs

நிரந்தர இளைஞன்…!

Kesavan Madumathy

Soorarai Pottru’s Maara theme is here!

Penbugs

An ode to Aditi Rao Hydari

Penbugs

Mika Singh offers help for actor-turned-watchman Savi Sidhu

Penbugs

அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

I was disappointed with National Awards: Dhanush

Penbugs

Bahubali 2 is a hit on Russian TV

Penbugs

Amala Paul opens up on divorce with AL Vijay

Penbugs

Leave a Comment