Cinema Coronavirus

அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை என ரஜினி அறிவிப்பு

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் கட்சி தொடங்கவில்லை என்பதால் ரசிகர்களும், மக்களும் என்னை மன்னியுங்கள்

என்னை நம்பி என்னுடன் வருபவர்களை பலிகடா ஆக்க நான் விரும்பவில்லை – ரஜினி

ஐதராபாத்தில் இருந்த போது எனக்கு ஏற்பட்ட ரத்தக்கொதிப்பு ஏற்றத் தாழ்வு தொடர்ந்து இருக்க கூடாது என்று மருத்துவர்கள் கூறினர் – ரஜினி

தொடர்ந்து ரத்தக் கொதிப்பில் ஏற்றத் தாழ்வு இருந்தால் என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும் – ரஜினி

எனது உடல்நிலை பாதிப்பால் அண்ணாத்த படப்பிடிப்பு பாதிப்பு, கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு, இது எனக்கான எச்சரிக்கை – ரஜினி

கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் மட்டும் பிரச்சாரம் செய்தால் போதாது – ரஜினி

சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் பெரிய எழுச்சியை ஏற்படுத்த முடியாது – ரஜினி

கட்சி துவங்கினால் பிரச்சாரத்திற்கு சென்று லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும் – ரஜினி

கொரோனா தடுப்பூசி வந்தாலும் கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் எனக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது – ரஜினி

பிரச்சாரத்தின் போது எனக்கு உடல் நிலை பாதித்தால், என்னுடன் அரசியல் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் பாதிப்பு – ரஜினி

என் உடல் நிலை பாதிக்கப்பட்டால் என்னுடன் என்னை நம்பி வருபவர்களுக்கு மனரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் துன்பங்களை சந்திக்க நேரிடும் – ரஜினி

நான் கொடுத்த வாக்கை தவறக்கூடாது என அரசியலுக்கு வந்து என்னை நம்பி என்னுடன் வந்தவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை – ரஜினி

அரசியலுக்கு வரவில்லை என்று அறிவிக்கும் போது ஏற்பட்டுள்ள வலி எனக்கு மட்டுமே தெரியும் – ரஜினி

சுயநலம் இல்லாமல் பணியாற்றி வரும் மக்கள் மன்றத்தினரின் சேவை வீண் போகாது, அந்த புண்ணியம் உங்கள் குடும்பத்தை காப்பாற்றும் – ரஜினி

நான் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும் – ரஜினி

தேர்தல் அரசியலுக்கு வராமல் என்னால் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியுமோ? அதை நான் செய்வேன் – ரஜினி

தேர்தல் அரசியலுக்கு வருவதில்லை என்கிற முடிவை எனது ரசிகர்களும், மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் – ரஜினி

என்று தனது டிவிட்டர் பதிவின் மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

Related posts

TN government announce relaxation measures for industries in non-containment zones

Penbugs

அல்போன்ஸ் தீட்டிய காதல் ஓவியம்

Shiva Chelliah

Reports: Amit Mishra and Wriddhiman Saha test COVID19 positive

Penbugs

RP Singh’s father passes away due to COVID19

Penbugs

தவறான கணக்கை காட்டிய சீனா ; தீடிரென உயர்ந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

Penbugs

Watch: 100YO COVID survivor gets warm welcome from neighbours

Penbugs

கேரளாவில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்வு

Penbugs

Vadivelu thank fans, promises to make grand comeback

Penbugs

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்- இத்தாலி அறிவிப்பு !

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2396 பேர் பாதிப்பு

Kesavan Madumathy

ஆப்பிள் மற்றும் 13 நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய தமிழக முதல்வர் கடிதம்

Anjali Raga Jammy

Daniel Radcliffe responds to Jk Rowling’s anti-trans tweets

Penbugs

Leave a Comment