Editorial News

பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய விராட்கோலி

ஆரோக்கியமான மனதிற்கு ஆரோக்கியமான உடலே அடித்தளம் என்று ‘பிட் இந்தியா’ திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்கள் உடனான கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

‘பிட் இந்தியா’ திட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நிபுணர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரும் நடிகருமான மிலிந்த் சோமன், ஊட்டச்சத்து நிபுணர்
திவேகர் ருஜுதா, சுவாமி சிவாத்யனம் சரஸ்வதி, ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் தேவேந்திர ஜஜாரியா, காஷ்மீர் கால்பந்து வீரர் அஃப்சன் ஆசிக் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இதில் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், உடல் நல ஆரோக்கியத்தை இயற்கை வழியில் எவ்வாறு பேணுவது என்பதை விளக்கி பிரதமர் மோடி பேசினார்.

உடல் ஆரோக்கியம் எவ்வாறு முக்கியமோ அந்த அளவிற்கு மன ஆரோக்கியமும் முக்கியம். ஆரோக்கியமான மனதிற்கு ஆரோக்கியமான உடலே அடித்தளம். அதிக அளவிலான மக்கள் ‘பிட் இந்தியா’ திட்டத்தில் இணைய வேண்டும். ஆரோக்கியமான மக்களாலே ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இயலும்” என்று கூறினார்.

இதில் துபாயில் இருந்தவாறு காணொளி வாயிலாக பேசிய இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ”விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சி மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் முறைகள் குறித்து விளக்கினார். கிரிக்கெட் பயிற்சி செய்யாத நாள்களிலும் உடற்பயிற்சி செய்யாமல் இருந்ததில்லை. உடல் ஆரோக்கியமே விளையாட்டின்போது ஏற்படும் சிக்கலான சூழலை எதிர்கொள்ள பேருதவியாக இருக்கிறது” என்று விராட் கோலி பேசினார்.

இதேபோன்று மாரத்தான் வீரரும் நடிகருமான மிலிந்த் சோமன், ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளி தேவேந்திர ஜஜாரியா, காஷ்மீர் கால்பந்து வீரர் அஃப்சன் ஆசிக் ஆகியோரிடமும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

Related posts

இந்தியாவில் மக்கள் வாழ சிறந்த நகரங்களில் நான்காவது இடம் பிடித்த சென்னை ..!

Kesavan Madumathy

பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி…!

Kesavan Madumathy

TN Govt school students to be taught via TV

Penbugs

வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடலை கண்ணீருடன் தோளில் சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் …!

Kesavan Madumathy

Srinivas Gowda says no to SAI trials; wants to continue with Kambala race

Penbugs

Chinese goods and liquor likely to be banned in military canteens

Penbugs

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

Penbugs

Experts committee recommends extended lockdown for TN

Penbugs

Another elephant death likely due to crackers in Kerala

Penbugs

JK Rowling once again in news for anti trans tweets

Penbugs

Sushant Singh’s death: CBI files FIR, names Rhea Chakraborty as accused

Penbugs

Man arrested for spreading fake news on Facebook

Penbugs

Leave a Comment