Coronavirus

கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தது

புனேவில் இருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தடைந்தது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக்குப்பின், வருகிற 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்க இருக்கும் நிலையில், மத்திய தொகுப்பில் இருந்து முதற்கட்டமாக 5.56 லட்சம் தடுப்பு மருந்து டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தடுப்பூசிகளை வைப்பதற்கு குளிர்பதனவசதிகளை ஏற்படுத்துதல், ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கியமாக, அனைத்து மாவட்டங்களிலும் 190 மையங்களில் 2 கட்டங்களாக தடுப்பூசி திட்ட ஒத்திகை நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்குவதற்கான தயார் நிலை உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “முதல்கட்டமாக சீரம் நிறுவனத்தின் 5.56 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளும், பாரத் பயோடெக்கின் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பு மருந்துகளும் வந்துள்ளன.

ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி போடப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும்.கோவிஷீல்டு, கோவாக்சினை யார் யாருக்கு எந்த தடுப்பூசிகளை போடுவது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி வருகிறது அதனை பின்பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

Related posts

Cricket during COVID19: Umpires disinfect ball as Sibley uses saliva to shine

Penbugs

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

Greta Thunberg supports the demand to postponed NEET, JEE during COVID19

Penbugs

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

Penbugs

Major breakthrough: Steroid Dexamethasone found to save 1 in 3 COVDI19 patients

Penbugs

நடிகர் விவேக் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல: மருத்துவமனை விளக்கம்

Kesavan Madumathy

உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசி இறக்குமதி : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy

DCGI approves Covaxin, Oxford-AstraZeneca vaccines for emergency use

Penbugs

தமிழகத்தில் இன்று 6998 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

நடிகை ஐஸ்வர்யா ராய் – மகள் ஆராத்யா இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Kesavan Madumathy

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

COVID19 in Tamil Nadu: 580 new cases

Penbugs

Leave a Comment