கமல்ஹாசனுக்கு காலில் பொறுத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றுவதற்கான சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது.
அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது.
அரசியல் மற்றும் சினிமாவில் அவருக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கானச் சூழல் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன்புதான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.
Toxic environment: The Ellen Show is under investigation