Coronavirus

எய்ட்ஸ் போல் கொரோனா வைரசும் சமூகத்தில் இருக்கும் : உலக சுகாதார அமைப்பு தகவல்!

உலகை படாதபாடு படுத்தும் தொற்று நோயான கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் சர்வதேச நாடுகள் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றன. உலகம் முழுவதுமாக இதுவரை கொரோனா வைரஸால் 43 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொடிய தொற்றுக்கு 2.94 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.

அதேசமயம் எய்ட்ஸ் போல் கொரோனா வைரசும் உலகை விட்டு போகாது என உலக சுகாதார அமைப்பு புது குண்டை போட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசர திட்டத்தின் இயக்குனர் மைக் ரியான் இது குறித்து கூறியதாவது: கொரோனா வைரஸ் சமூகத்தில் மற்றொரு தொற்று நோயாக இருக்கும் மற்றும் எச்.ஐ.வி. (எய்ட்ஸ்) ஒரு போதும் நீங்காது போல கொரோனா வைரசும் நீங்க வாய்ப்பில்லை.

நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும். நோய் எப்போது மறையும் என்பது நமக்கு தெரியாது. உலகில் உள்ள அனைவருக்கும் விநியோகிக்கக்கூடிய மிகவும் பயனுள்ள தடுப்பூசியை நாம கண்டுபிடிக்க முடிந்தால், கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான ஒரு காட்சியை நாம் கொண்டிருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய சுகாதார துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா வைரசுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை நாம் வாழ்க்கை முறை மாற்றங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறியது சரிதான் என்பதை உலக சுகாதார அமைப்பின் தற்போதைய தகவல் உறுதி செய்துள்ளது.

Image Courtesy: Google Images

Related posts

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 3,446 பேருக்கு கொரோனா தொற்று

Penbugs

He was practising hard, you’ll see his helicopter shot soon: Raina on Dhoni

Penbugs

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

Kesavan Madumathy

COVID19 in TN: 447 new cases

Penbugs

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கல்லூரிகளில் பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு

Penbugs

தமிழகத்தில் இன்று 4929 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

முகக் கவசம் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது

Penbugs

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Coronavirus: Mithali Raj donates 10 Lakhs to relief fund

Penbugs

தமிழகத்தில் இன்று 6406 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னை, டில்லி, மும்பைக்கு அதிக காலத்திற்கு ஊரடங்கு தேவை: உலக சுகாதார அமைப்பு!

Penbugs