*
சவாரி செய்கிறான்
இறப்புக்கும் பிறப்புக்கும்
கால நேர அட்டவணையின்றி
பொதுவாகவே நம்ம ஊருல
ஆட்டோகாரர்கள்னா வண்டிய
கொஞ்சம் ராஷ் – டிரைவ்
பண்ணுவாங்கன்னு ஒரு பேச்சு
அடிபடுது நம்ம மக்கள் மத்தியில
அதுவும் இதில் பெரிதும் வாய்
மொழிகளை வாங்கி காட்டிக்கொள்வது
ஷேர் ஆட்டோக்காரர்கள் மட்டுமே
வடிவேல் காமெடி வகையறாவில்
சொல்ல வேண்டும் என்றால்
நம்ம பங்கு ஆட்டோ டிரைவர்கள்,
ஆயிரம் வசைப்பாடு வாங்கினாலும்
ஆட்டோகாரர்கள் பற்றி நல்ல விஷயம்
பேசினால் நிறைய பேசிக்கொண்டே
போகலாம்,
பாட்ஷா படத்துல “நான் ஆட்டோக்காரன்”
பாட்டு தான் இவங்களோட “ஆட்டோ கீதம்”
-ன்னு சொல்லுற அளவு அந்த டைம்ல
அந்த பாட்டு ஹிட் அடிச்சதுக்கு
இவங்களும் முக்கிய காரணம் – ன்னு
சொல்லலாம், அந்தப்படம் வந்து
இருபத்தி ஐந்து வருடம் ஆனாலும்
இன்றைக்கும் ஆயுத பூஜை – ன்னா
தமிழ்நாடுல இருக்க எல்லா ஆட்டோ
ஸ்டாண்ட்லயும் தொடர்ச்சியா ஒரு பத்து
தடவை அந்த பாட்டு ஒலி பரப்பாகும்,
என்ன தான் “ஓலா கேப்” மவுசு
அதிகமாக இப்போது இருந்தாலும்
நடுத்தர மக்களின் ஒரு மூன்று சக்கர
தேர் – ன்னு சொல்லலாம்,
பிரசவம்,விபத்து,விசேஷம் என
நடுத்தர மக்களின் வீட்டில் நடக்கும்
ஒவ்வொரு நிகழ்விலும்
ஆட்டோ டிரைவர்கள் ஒரு அழையா
விருந்தாளியாக வந்து அந்த நிகழ்வுக்கு
ஆட்டோ மட்டும் ஓட்டாமல்
நம்முடன் ஒத்துழைப்பாக நிறைய
உதவிகளையும் செய்வர்,
இன்றும் இரவு நேரம் ஆனாலும்
பிரசவத்திற்கு இலவசமாக
ஆட்டோ ஓட்டும் நல்ல உள்ளம்
கொண்ட டிரைவர்கள் நம்ம ஊரில்
இன்னும் இருந்து கொண்டு தான்
இருக்கிறார்கள்,
IT – ல இருந்து சிட்டி சென்டர் மால்- வர
“ஓலா கேப்” – னா கேட்டரிங்ல இருந்து
வீட்டுல நடக்குற நல்லது கெட்டது வர
எல்லாத்துக்கும் ஆட்டோகாரங்க
தான் நம்மளோட சொந்தக்காரங்க,
ஊருக்கு புதுசா வரவனுக்கு
வழி சொல்லுறதல இருந்து
வழிப்போக்கனுக்கு ஊர் சுத்தி
காமிக்குற வரைக்கும் இந்த
ஆட்டோகாரங்க எப்பவுமே
நமக்கு ஒரு “மாணிக்கம்” தான்,
||
இவன் ஓட்டுவதோ
மூன்று சக்கர வாகனம்
எத்தனையோ மக்களின்
மூன்றாம் நிலை தோழனாக
(இறப்பில் பங்குபுரிபவன்)
நம்முடன் பயணம் செய்கிறான்,
||