பிப். 24-ல் சென்னைப் புத்தகக் காட்சி,
சென்னையில் புகழ்பெற்ற புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பெறும் 44-வது புத்தகக் காட்சி இது.
கொரோனா காரணமாக நிச்சயமின்றி இருந்த நிலையில், வழக்கமாக ஜனவரியில் நடத்தப்படுவது தள்ளிச் சென்று, தற்போது பிப்ரவரியில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிப்ரவரி 24 தொடங்கி, மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நான்கு நாட்கள், காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் எனத் தகவலறிந்த பபாசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
MS Dhoni was a special man in the run chase: Michael Holding