Coronavirus Editorial News

சென்னையில் பெட்ரோல் டீசல் 9 நாளில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4.87 உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனையால் நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. வரி வருவாய் பாதிக்கப்பட்ட சூழலில் கடந்த மே 6 ஆம் தேதி அன்று மத்திய அரசு மீண்டும் கலால் வரியை பெட்ரோல் லிட்டருக்கு ரூ .10 மற்றும் டீசலுக்கு ரூ .13 ஆக உயர்த்தியது.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையில் அதன் பிறகு தினசரி மாற்றங்களை அறிவித்து வெளியிட்டன. பெட்ரோல் டீசல் விலை கடந்த ஜூன் 8ம் தேதி முதல் தினமும் அதிகரித்து வருகிறது.

Read: https://penbugs.com/chennaiyil-varum-19m-thedhi-mudhal-muzhu-ooradangu/

அந்த வகையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 48 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 23 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4.87 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை 43 பைசா உயர்ந்து 79.96 க்கு விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.47 பைசா உயர்ந்து 83.17 ஆக விற்பனையாகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை இன்று 0.48 பைசா உயர்ந்து 76.26 பைசாவுக்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.46 பைசா உயர்ந்து 78.10க்கு விற்பனையாகிறது.

சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 0.51 பைசா உயர்ந்து 72.69க்கு விற்பனையாகிறது. டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 0.59 பைசா உயர்ந்து 74.62க்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் டீசல் விலை 0.53 பைசா உயர்ந்து 70.33க்கு விற்பனையாகிறது. மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு 0.57 பைசா உயர்ந்து 73.21க்கு விற்பனையாகிறது.

Related posts

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

Penbugs

Truecaller details of more than 4 crore Indians for sale on dark net: Reports

Penbugs

Why not a complete lockdown for Chennai alone: Madras High Court asks TN Govt

Penbugs

TN Govt Adds 1000 more beds as Most hospitals are nearly full

Penbugs

பீடி ,சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

Penbugs

Gautham Gambhir starts an initiative to help daughters of sex workers

Penbugs

தமிழகத்தில் இன்று 5165 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை அபராதம் இன்றி செலுத்த கூடுதல் கால அவகாசம்…!

Penbugs

Kerala’s ruling and opposing party come together for CAA protest

Penbugs

பெங்களூர் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

Penbugs

COVID19 in Trichy: Patient recovers, gets a heartwarming sendoff

Penbugs