Coronavirus

கொரோனா: அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட்டை பயன்படுத்த வேண்டாம்; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட்டில் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாக கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற பரிசோதனை கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், ரேபிட் கிட்டின் பரிசோதனை முடிவுகள் துல்லியமானதாக இல்லை எனக்கூறி ராஜஸ்தான் அரசு நிறுத்திவைத்தது.

இந்த நிலையில், அடுத்த இரு நாட்களுக்கு கொரோனாவைக் கண்டறிய ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ அராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ரேபிட் கிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுவதாக வெளியான தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளின் தரத்தினை பரிசோதித்து வருகிறோம், மீண்டும் இந்தக் கருவிகளை கொண்டு சோதனையை தொடங்குவது பற்றி விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும் ” என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related posts

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1443 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Bengaluru: 103 test COVID19 positive after a party

Penbugs

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

Penbugs

ENG v WI: Cricket is back!

Penbugs

தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகளுடன் கரோனா வகைப்படுத்துதல் மையம் திறப்பு

Penbugs

சமூக இடைவெளியில் அசத்தும் மிசோரம்

Penbugs

Spanish Princess Maria Teresa dies due to coronavirus

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Intense COVID19 can be controlled, Dharavi is an example: WHO’s Tedros

Penbugs