Editorial News

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31 வரை நீடிப்பு – மத்திய அரசு

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை வருகிற ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என்றும், அந்த நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளில் தொடர்ச்சியாக சரிவு காணப்பட்டாலும் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையை பராமரிக்க வேண்டியது அவசியம் என்றும், பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனாவை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related posts

திருமண வரவேற்பு விழாவில் நெகிழ்ச்சி : உயிரிழந்த தந்தையின் சிலை முன்பு தங்கையின் திருமணத்தை நடத்திய சகோதரிகள்..!

Penbugs

Meerut woman who ran away from home to avoid marriage returns as PCS officer after years

Penbugs

BBL 2020 | Match 11 | SIX vs STR | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

TANGEDCO announces Power cut in few areas on January 25

Penbugs

Dalit woman who was gangraped and was assaulted dies in hospital

Penbugs

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

Penbugs

Football: Brazil to pay equal salary for both men and women national players

Penbugs

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது.

Penbugs

Azharuddin meets with an accident

Penbugs

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Penbugs

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்

Penbugs

Leave a Comment