Coronavirus

இ – பாஸ் நடைமுறை குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு

அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூலை 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லை அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் தொடரும். ஜூலை 6 முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சலூன்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த ஜூலை 6-ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும். ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 24ஆம் தேதிக்கு முன்னர் இருந்த கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் இருக்கும்.

தமிழக அரசின் உத்தரவில் அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும். வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். மேலும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் 30.6.2020 வரை வழங்கப்பட்ட
இ-பாஸ் 5.7.2020 வரை செல்லும். இதற்கு மீண்டும் புதிய இ-பாஸ் பெறத்தேவை இல்லை.

ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு அரசுப்பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இப்பணிகள் சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களால் இ-பாஸ் வழங்கப்படும்.

Related posts

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

Penbugs

‘Quarantine like your life depends on it’: Note from 22YO COVID19 patient

Penbugs

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2376 ஆக உயர்வு

Penbugs

மலர்தூவி ரோஜாவுக்கு வரவேற்பு அளித்த மக்கள் – சர்ச்சையில் சிக்கிய வீடியோ

Kesavan Madumathy

கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று

Kesavan Madumathy

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

Yogi Babu helps small screen technicians

Penbugs

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு!

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5000 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

சென்னை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Penbugs