Coronavirus

இ‌பாஸ் தளர்வால் சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்

சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இ-பாஸ் என்னும் நடைமுறை அமலுக்கு வந்தது.

இதன்படி ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கோ, ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கோ செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது.

இ-பாஸ் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்த போதிலும், தமிழகத்தில் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.

மண்டலம் விட்டு மண்டலம் என்ற நிலை மாறி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற கடுமையான விதி பின்பற்றப்பட்டது.

திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் அளிக்கப்பட்டு வந்தது.

மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தாலும் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். இ-பாஸ் பெறுவதற்கு இடைத்தரகர்கள் லஞ்சம் வாங்கிய சம்பவமும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது

இந்த நிலையில், 17-ந் தேதி முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் செல்போன் எண்ணை இணைத்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இன்றி உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம் என்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி இ-பாஸ் நடைமுறை தளர்வு 17-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்தநிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,335 பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர்‌.

Related posts

Actor Dhruva Sarja and wife Prerana tests positive for COVID19

Penbugs

COVID19: Afghanistan’s teenage girls’ team is building cheap ventilators

Penbugs

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

Man who attended Boxing Day Test, tests positive for COVID19

Penbugs

Prithviraj Sukumaran tested positive for coronavirus

Penbugs

தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா..!

Kesavan Madumathy

Former President Pranab Mukherjee on ventilator support, remains critical

Penbugs

COVID19: Nayanthara donates Rs 20 Lakhs to FEFSI workers

Penbugs

IPL 2020 might to happen outside India

Penbugs

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

சென்னையில் முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை

Penbugs

Lockdown: Woman gangraped in a school at Rajasthan

Penbugs

Leave a Comment