Cricket Men Cricket

என்னை பொறுத்தவரை இவர் தான் சிறந்த கேப்டன், மனம் திறக்கும் கவுதம் கம்பீர்

தன்னை பொறுத்தவரையில், கும்ப்ளே தான் இந்திய அணியின் சிறந்த கேப்டன் என பாஜக எம்.பி.,யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, தோனி உள்ளிட்ட கேப்டன்கள் தலைமையிலான இந்திய அணியில் கவுதம் கம்பீர் விளையாடியுள்ளார். இந்நிலையில் தன்னை பொறுத்தவரை யார் சிறந்த கேப்டன் என தனியார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். தோனி பல சாதனைகளை செய்திருந்தாலும், அனில் கும்ப்ளே தான் இந்திய அணியின் சிறந்த கேப்டன் என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கவுதம் கம்பீர், ‘ சாதனைகளை வைத்து பார்க்கும் போது தோனி தான் முன்னிலையில் இருக்கிறார்.

ஆனால் என்னை பொறுத்தவரை அனில் கும்ப்ளே தான் சிறந்த கேப்டன்.

அவர் நீண்டகாலம் இந்திய அணிக்கு தலைமை தாங்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். ஆனால் அவர் நீண்ட காலம் இந்திய அணியின் கேப்டனாக இருக்க முடியவில்லை. ஒருவேளை அவர் இன்னும் சில காலம் கேப்டனாக இருந்திருந்தால், நிச்சயம் பல்வேறு சாதனைகளை முறியடித்திருப்பார். அவர் தலைமையில் நான் 6 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளேன்’ என்றார்.

இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பெருமையை கும்ப்ளே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Women’s World Cup T20: England stick with familiar faces

Penbugs

We will try to come back strong: MS Dhoni after SRH match

Penbugs

India’s squad for South Africa series announced

Penbugs

Team India’s super fan Charulata Patel passes away!

Penbugs

Sachin Tendulkar lends hand for ailing Ashraf Chaudhary who once fixed his bat

Penbugs

In Conversation with Cricket Puducherry’s Santhamoorthy

Penbugs

IPL 2020 auction: Top five expensive buys

Penbugs

Sunday double-header: RCB, DC win convincingly

Penbugs

Riyan Parag, the prodigy!

Penbugs

Syed Mushtaq Ali T20 Trophy | MUM vs DEL | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

BBL 2020 | STR vs SCO | MATCH 21 | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

RUB vs SAP, Match 12, KCA Pink T20 Challengers, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy