Penbugs
Cinema Inspiring

விஜய் சேதுபதியும் – அவருடைய மனிதர்களும்!!

விஜய் சேதுபதி எப்படி குணசித்திர காதபாத்திரத்தில் நடித்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மெனக்கெட்டு முன்னேறினார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதை தாண்டி அன்பை பகிரும் எண்ணம், கதாபாத்திரத்தை கிரகித்து கொள்ளும் பக்குவம், போன்றவற்றை பல பேட்டிகளில் கூறி இருப்பினும்,

விஜய் சேதுபதியும் – அவருடைய மனிதர்களும்

ஏக ஆச்சர்யத்தையும் கலையின் மிச்சத்தை விஜய் சேதுபதியின் மூலம் செலுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

யாரோ ஒருவர் யார் விஜய்சேதுபதி? என ட்விட்டரில் கேட்டதற்கு “விரைவில் தெரியும்” என்று மக்கள் செல்வனின் ஆரம்ப காலம் தொட்டே பெரும் நம்பிக்கையும், பேரன்பும் அளித்து வரும் கார்த்திக் சுப்புராஜ் முதல் தற்போது எழுதும் திரை எழுத்தாளர்களின் கதாபாத்திரத்திற்கு முதல் பிம்பமாக எண்ண ஓட்டத்தில் தெரிபவர் – விஜய் சேதுபதி.

முன்னொரு காலத்தில் தான் குணச்சித்திர கதாபத்திரமாக நடித்த படத்தின் வசனகர்த்தா உடனான நட்பின் காரணமாக அவரின் இயக்குனர் ஆசைக்கு பொருளுதவி செய்து படம் தயாரித்தது வரை, விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் நட்பிற்கான- மனிதர்களுக்கான முக்கியத்துவம் ஓங்கி நிற்கிறது. (படம் – மேற்கு தொடர்ச்சி மலை வசனகர்த்தா ஆக இருந்து இயக்குனர் ஆனவர் – லெனின் பாரதி , விஜய் சேதுபதியின் நட்சத்திர அந்தஸ்து இந்த கதைக்கு அவரின் நடிப்பு தேவை இல்லை என்று சொன்னது துணுக்கு செய்தி).

விஜய் சேதுபதி நட்பின் காரணமாக அதை முன்மொழிந்தே ஒப்புக்கொண்ட படங்களின் எண்ணிக்கை அதிகம் – விக்னேஷ் சிவனின்நானும் ரவுடி தான்” மற்றும் ரேனிக்குண்டா இயக்குரின் “கருப்பன்” மற்றும் பல படங்கள் உதாரணம். அப்படியான சில படங்கள் அவருடைய திரை வர்த்தகத்தை குறைத்திட வழிவகுப்பினும், அதை சட்டை செய்யாமல் தனக்கான மனிதரகளுக்கு அவர் நன்செய்தே வருகிறார்.

90களுக்கு பிறகான தமிழ் சினிமாவில்,கிட்டத்தட்ட குறுகிய காலத்தில் வருடத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நட்சத்திர நடிகர் விஜய் சேதுபதியாக தான் இருக்க கூடும்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய ரசிகர்களை, நலன் விரும்பிகளை அவர் வழிநடத்தும் விதமும், அவர்களிடத்தில் அன்பு பொழியும் மனப்பான்மையும் ஏக மரியாதையை அவர் மீது உண்டாக்கி விடுகிறது.

அதுபோலவே, வெவ்வேறு மொழிகளில் அவர் நடித்து கொண்டு இருந்தாலும், அங்கே இவரின் பங்களிப்பு பற்றியும், அவருடைய திறன் பற்றியும் சக நடிகர்கள் கூறும் போது மிகுந்த ஆச்சர்யமும், அவர்களிடத்தே நீண்ட நெடும் காலமாக தமிழ் சினிமா மீது இருக்கும் பார்வையும் மாற்றியமைப்பதற்கான சூழலை உருவாக்கி கொண்டு இருப்பவர் – விஜய் சேதுபதி.

உதாரணம் – தமிழ் திரை உலகத்தில் பல நட்சத்திர நடிகர்கள் சங்கமித்து நடிக்கும் படங்களின் எண்ணிக்கை.

புது முயற்சிகளும், பேரன்பு கொண்ட களைஞர்களோடு மேலும் நெடுந்தூரம் பயணிப்பார் என்ற நம்பிக்கையோடு, விஜய் சேதுபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளும் முத்தங்களும்!!!

Related posts

Kaathodu Kaathanen single from Jail is here!

Penbugs

Bhoomi review

Penbugs

Common language good for country, not possible in India: Rajinikanth on Amit Shah’s remarks

Penbugs

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக்குறைவால் காலமானார்

Penbugs

Mysskin’s Pisasu 2 to star Andrea Jeremiah as lead

Penbugs

Prithviraj Sukumaran tested positive for coronavirus

Penbugs

Mammootty’s tweet to Rajinikanth, wishing him well, wins social media

Penbugs

KS Ravikumar on Parasite-Minsara Kanna comparison: I selected an Oscar-worthy script 20 years ago!

Penbugs

August 14, 2015: A perfect Perry World | AUS v ENG

Penbugs

Bhagyaraj resigns

Penbugs

Rest in Peace, the king of wordplay!

Penbugs

Annaatthe to release by Pongal 2021

Penbugs

Leave a Comment