Penbugs
Cinema

Idhayam Movie | Rewind Review

1992 – இல் ஒரு குழந்தை பிறக்கிறது
கொஞ்சம் கருப்பாக இந்த காலத்திற்கு
ஏற்றவாறு சொல்ல வேண்டும் என்றால்
“Dusky”, அந்த அம்மாவிற்கு இது
இரண்டாவது குழந்தை முதலில் ஒரு
பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில்
இறந்து விட்டது, அதற்கு பிறகு பிறப்பது
இந்த ஆண் குழந்தை,

2002 – இல் இந்த ஆண் குழந்தையின்
அப்பா இறந்துவிடுகிறார், அப்போது
இவனுக்கு பத்து வயது, அதற்கு பிறகு
இவனுடையஅழுகை,சிரிப்பு,பசி,
அரவணைப்புன்னு எல்லாமே
அவங்க அம்மா தான்,

அவனுக்கு கையில அள்ளி சாப்பிட
தெரியாத தன் மகனுக்கு அந்த அம்மா
தான் ஊட்டிவிடுவாள், அப்படி ஒரு நாள்
ஊட்டிவிடும் போது முரளி நடித்த
“காமராசு” திரைப்படம் டிவியில்
ஒளிபரப்பாகி கொண்டிருந்தது, எல்லா
அம்மாக்கும் தன் மகன் என்றால் பேரழகு
தானே, அப்படி தான் கருப்பாக இருக்கும்
தன் மகனை முரளி மாதிரி என்னோட
மகன் கருப்பா கலையா இருப்பான்னு
சொல்லிட்ட்டே இருந்தாங்க அன்னக்கி,
அன்னக்கி மட்டும் இல்ல எப்பவுமே,
அடுத்த இரண்டு வருடத்தில் 2004 – இல்
அந்த அம்மாவும் இறந்தார்,பிறகு அவள்
மகனின் வாழ்வு முழுவதும் தனிமையின்
தாகம் மட்டுமே, 2010 -இல் காலேஜில்
அவள் மகன் படித்துக்கொண்டிருக்கும்
போது எதார்த்தமாக ஒரு நாள் இதயம்
படத்தை டிவியில் பார்க்க அம்மா
ஞாபகம் அவனுக்கு வந்துவிடுகிறது,

அவனை போலவே உள்ளுக்குள்ளேயே
தன் ஆசைகளை புதைத்துக்கொள்ளும்
ஒரு ஹீரோ (முரளி),தன் அம்மாவை
போல் மிகவும் அன்பான அம்மா
(மனோரமா), உறுதுணையாய் இருக்கும்
நண்பன் (சின்னி ஜெயந்த்),முரளி
விரும்பும் காதலியாக (ஹீரா), என
அவனுக்கான படமாக அன்று அவன்
பார்த்தான், 1991 – இல் வந்த இதயம்
படத்தை 2010 – இல் பார்த்தான்,
இப்போது 2020 – இன்றும் பார்த்துவிட்டு
அந்த படத்திற்கு Rewind ரிவியூ
எழுதுகிறான் அவன்,

< “இதயம்” >

இயக்குநர் கதிர் அவர்களின் முதல் படம்,

எதர்ச்சையாக விக்கிபீடியாவில்
இன்று இந்த படத்தை பற்றி
பார்த்துக்கொண்டிருக்கையில் “Release
and Reception ” Category – இல் இந்தியன்
எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின்
திரு.N.கிருஷ்ணஸ்வாமி அவர்கள்
இந்த படத்திற்கு 1991 – இல் எழுதிய ஒரு
குட்டி ரிவியூ கண்களில் சிக்கியது இதோ,

| * |

Idhayam was Released on 6 September
1991, N. Krishnaswamy of The Indian
Express stated, The Unimaginative,
Half-Baked and Immature Treatment of the
Story often invites Derision.” About the
Cast Performances, He said, “Murali, who
is More accustomed to Action films does
not Seem to fit into the Role of the inwardly
Harried Student, Newface Hira, who has
little to do Except look Serenely at
everything around her, is well cast.”
Krishnaswamy added that Chinni
Jayanth was “vibrant as the comedian”,

| * |

அவர் இந்த ரிவியூவை கூறியது
நிச்சயமாக என்னால் ஏற்றுக்கொள்ள
முடியாது என்று தான் சொல்ல வேண்டும்,
நான் மட்டும் இல்லை, இங்கு நிறைய
பேர், இதயம் படத்தில் “ராஜபாண்டி @
ராஜா” – வாக முரளி அந்த
கதாப்பாத்திரத்தின் தாக்கத்தை எந்த
அளவு நமக்குள் விதைத்திருப்பார்
என்பது அனைவரும் அறிந்ததே,

அதிலும் கீதா கேரக்டரில் வரும் ஹீரா
யூத் – கள் என்றால் லெனின் போலவும்,
பாரதி போலவும் வர வேண்டும் என
பேசுமிடத்திலும் ராஜாவின் காதலி
கீதாவாக வரும் இடங்களிலும் நமக்குள்
காதலை உண்டாக்கி செல்வாள், சின்னி
கேரக்டரில் வரும் சின்னி ஜெயந்த்
காமெடிக்கென்று இல்லாமல் ஒரு
துணை நடிகர் ரோலை தன் முதுகின்
மேல் தாங்கியிருப்பார், ஒவ்வொரு
ஸீனிலும் இயக்குநர் கதிர் தன்
வசனங்கள் வழியே நம்மை அவரின்
காதல் பயணத்திற்கு உடன் அழைத்து
செல்வார், படத்தில் ஆங்காங்கே வரும்
காதல் கவிதைகளுக்கெல்லாம் முதல்
அடித்தளம் என்று சொல்லும் அளவிற்கு,

| * |

இந்த பாதங்கள் மண் மீது
நடக்க வேண்டியவை இல்லை
மலர்கள் மீது,

| * |

என்று ராஜா பேப்பர் ராக்கெட் மூலம்
கீதாவிற்கு தூதுவிடும் முதல்
கவிதையிலேயே இயக்குநர் கதிர் தான்
சொல்ல வரும் காதலை ஒரு ரசிகனின்
மனதில் ஆழமாக பசுமரத்தாணி போல்
பதிவு செய்துவிடுவார்,

படம் தொடங்கியவுடன் ராஜா ரயிலில்
தவறவிடும் தன் டைரியில் தொடங்கும்
படம் முடிவில் அதே ராஜா ரயிலில் தன்
மருத்துவ படிப்பை முடித்துக்கொண்டு
ஒரு மருத்துவர் மற்றும் “நோயாளியாக”
திரும்புவார்,

படம் முழுக்க ராஜா (முரளி)
தன் காதலுக்கான ஒரு தேடல் சார்ந்த
வாழ்க்கையிலேயே இருப்பான்,அவன்
காதலி கீதா (ஹீரா) – வுக்காக அவன்
மீட்டாத ராகங்களும் இல்லை
தீட்டாத கவிதைகளும் இல்லை,

தன் காதலை தனக்குள்ளேயே
வைத்து பூட்டிக்கொண்டு
அவன் காதலியிடம் தன் காதலை
தெரிவிக்காமலே தன் இதயத்தில்
அடை காக்கும் கோழியாக அடைத்து
வைத்துக்கொண்டு இறுதியில் அவன்
அவளை சுமந்த அந்த இதயத்திற்கே
இதயம் பல வீணமாகி கடைசியில்
அவள் கண்ணீர் விழுந்த தண்ணீரையே
குடித்துக்கொண்டு ராஜா அங்கிருந்த
விடை பெறுவான் அவனுக்காக
கீதா காத்திருப்பாள் என்பதும் நமது
நம்பிக்கையும் கூட,

ராஜாவுக்கும் – கீதாவுக்கும்
இசைஞானி தன் ஆன்மாவில் இருந்து
ஒரு இசை வடிவம் தயார் செய்து அந்த
வடிவம் சார்ந்த காதல் உலகத்துக்குள்
இருவரின் காதலுக்கும் தனியே தனியே
தன் ராகத்தை பிரித்து கொடுத்திருப்பார்,

நெகடிவ் கிளைமாக்ஸ் என்பது கதைக்கு
தேவையான ஒன்றாக இருக்க வேண்டும்
அதை திணிப்பது சினிமாத்தனம்,
எதார்த்தம் என்றும் தனிச்சு பேசும்
அதுக்கு ஒரு தனி மவுசு இன்னும்
இருக்கு, அப்படி ஒரு எதார்த்தம் பேசும்
நெகடிவ் டிரீட்மென்ட்டை தான் இயக்குநர்
கதிர் இங்கு கையாண்டிருப்பார்,

ஒரு நெகடிவ் கிளைமாக்ஸ் என்பது
ஒரு இரண்டு நாட்களாவது அந்த
தாக்கத்தை நமக்கு கொடுக்கணும்,
அந்த தாக்கம் நமக்குள் ஒரு பாதிப்பை
கொடுக்கணும் ஆன்மா ரீதியாக,
அந்த தாக்கத்தில் இருந்து நாம் மீண்டு
வர முடியாமல் நம்ம மனசு தவிக்கணும்
அதான் அழகான எதார்த்தத்தை பேசும்,
சினிமாத்தனமாக இருக்கும் நெகடிவ்
கிளைமாக்ஸ்களில் ஊறிக்கிடக்காமல்
நாம் கொண்டாட மறந்த எதார்த்தத்தை
கையில் ஏந்தி அழகு பாருங்கள்,

வாமனன்,என்றென்றும்
புன்னகை,மனிதன் போன்ற படங்களை
இயக்கிய இயக்குநர் திரு.அஹமது ஒரு
பெட்டியில் சொல்லியிருப்பார், அந்த
காலத்தில் இதயம் பார்த்துவிட்டு
என்னுடைய இரண்டு நாட்கள் தூக்கம்
பறிபோனது என்று, அந்த இன்டெர்வியூ
யூடியூபில் உள்ளது இப்போதும் கூட,

அப்துல் ரஹ்மான் அவர்கள்
ஒளிப்பதிவும்,லெனின் – VT விஜயன்
அவர்களின் கத்திரியும் படத்திற்கு
கூடுதல் பலம் என்றே சொல்லலாம்,

நாம் அனைவருக்கும் தெரிந்த
விஸ்வாசம் தயாரிப்பாளர் சத்யஜோதி
G.தியாகராஜன் தான் இதயம் படத்தை
தயாரித்தார்,

ஒரு தலை காதல் என்றால் இன்று வரை
“இதயம் முரளி ” என்று சொல்லும்
அளவிற்கு தன் வாழ்நாள் சாதனை
போன்றதொரு நடிப்பை கொடுத்த
முரளியும்,அதே நேரத்தில் மிகவும்
மெளனமாக ஒரு கேரக்டர் ஆனால் அந்த
மௌனத்திலும் கூட ஒரு கவித்துவம்
இருக்கும் இறுதியில் அது காதல் ஆக
மாறி ஒரு பெண்ணின் எதார்த்த சாயலை
நமக்கு கொடுத்த ஹீராவும் இந்த
படத்துக்கான காதல் ஜோடி பறவைகள்,

படத்தின் தலைப்புக்கேற்ப இதயம்
எனும் ஓர் மெல்லிய உடல் உறுப்பில்
முடியக்கூடிய Perfect கிளைமாக்ஸ்,

*
இதயம் :
இயக்குநர் கதிரின் ஒரு தலை காதல்..!! ❤️

Related posts

ராகதேவனுடன் ஓர் அகவை தின பயணம்!

Shiva Chelliah

சைக்கோ | Psycho – Movie Review

Anjali Raga Jammy

சென்னையில் புதிய ஸ்டுடியோவில் தனது பணிகளை தொடங்கினார் இளையராஜா

Penbugs

சண்முக ராஜா மிஷ்கின்!

Kumaran Perumal

கௌதமை அறிந்தால்..!

Penbugs

கதிர்..!

Kesavan Madumathy

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் | Movie Review

Penbugs

என் இனிய தனிமையே..!

Shiva Chelliah

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்..!

Shiva Chelliah

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித் ஸ்ரீராம்!

Kesavan Madumathy

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – வாணி ஜெயராம்| Penbugs

Kesavan Madumathy

இசையமைப்பாளர் சங்கத்துக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி

Kesavan Madumathy