Editorial News

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி உத்தரவு

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தன்முதலில் எம்ஜிஆர் 1987-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த நிதி உதவித்தொகையை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5.25 லட்சம் ரூபாயாக ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த 30.1.2018 அன்று, இந்நலநிதியை 5.25 லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க நான் உத்தரவிட்டேன்.

சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர் இவர்கள் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும். கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப்படிப்பினை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது.

இக்காலகட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதோடு, ஒரு சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக்கொள்ள இயலாமல் வேறு மாற்றுத்தொழிலுக்குச் சென்று விடும் நிலையும் உள்ளது.

இதுபோன்று தற்போது வறுமையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஒரு சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. இதன்படி, இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு…!

Kesavan Madumathy

என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Penbugs

Tamil Nadu is Corona free, says Health Minister

Penbugs

Anand Mahindra offers resorts as temporary COVID-19 hosps, donates 100% salary

Penbugs

Are newspapers dying?

Penbugs

F1, US Grand Prix: Hamilton wins his sixth title!

Penbugs

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Kesavan Madumathy

Donald Trump nominated for Nobel Peace Prize

Penbugs

Rwanda finally releases 50 women jailed over abortions

Penbugs

TN girl for whom Kerala ran a special bus, scores 95%

Penbugs

Gautham Gambhir joins BJP

Penbugs

Rajinikanth post fake news and twitter takes it down

Lakshmi Muthiah