Short Stories

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்,

அறம் சொல்லித்தந்து
அழகாக எனை படைத்து
அன்பில் அரவணைத்து
அன்னை – யாகிய அன்பின் தமிழே

ஆக்கம் கொடுத்து
ஆருயிர் பல தந்து
ஆலமர விழுதாய் நின்று
ஆலயமாக விளங்கும் கடவுளே

இறைவியாய் இருந்து
இடம் பொருள் ஏவல் அறிந்து
இளங்காற்று என்னுள் வீச
இமைக்கா நொடியாய் இருந்தவளே

ஈசனின் பார்வதியாக
ஈன்றவளாகிய ஸ்தானத்தில்
ஈழம் பல உன் வாழ்வில் கண்டு
ஈன்றெடுத்த பொற்கொடியாளே

உணவும் மருந்தும் தந்து
உதிரம் சிந்தி உயிர் கொடுத்து
உலக மேடையில் உயர்வு செய்து
உண்மையான அன்பை காட்டியவளே

ஊக்கங்கள் பல தந்து
ஊழல் இல்லா தூய்மையான
ஊஞ்சலில் எனை சமநிலையில் சீராட்டி
ஊதையை ரசிக்க செய்தவளே

எழில் கொஞ்சும் இரவு நேரத்தில்
எடை கனமுடைய எனை சுமந்து
எக்களிக்க எனக்கு உணவளித்து
எதிர்நீச்சல் பல வாழ்வில் அடித்தவளே

ஏலேலோ ராகம் பாடி
ஏகப்பட்ட இன்னல்களுடன்
ஏற்றங்கள் பல இடருடன் கண்டு
ஏழு நாட்களும் வாரத்தில் உழைப்பவளே

ஐந்தெழுத்து மந்திரமாக
ஐம்பூதங்களின் பரப்பில்
ஐப்பசி மாத மேன்மை தந்து
ஐம்புலன் அடக்கி அகிலம் வென்றவளே

ஒற்றை காலில் நின்று
ஒரு கை வசம் பார்த்து
ஒழுக்கத்தை கற்பித்து
ஒளிர்வாக என் வாழ்வில் வந்தவளே

ஓசை எழும்பும் ஒலியாக
ஓம் எனும் மூலமந்திரத்துடன்
ஓசைப்பூ மாலை கோர்த்து
ஒவ்வொரு நாளும் பூஜை செய்பவளே

ஒளடதம் பல நீ உண்டு
ஒளவியம் ஏதும் இன்றி
ஒளடனம் மட்டும் எனக்கு அளித்து
ஒளவை போன்ற தவப்பெண்ணானவளே

ஃ – ஆயுத எழுத்தாய் தனித்திருப்பவளே

*
தமிழே அமுதே
ஊனே உயிரே

| எழுத்து : Shiva Chelliah | ❤️

Related posts

உலக இசை தினம் இன்று …!

Kesavan Madumathy

கரைகின்ற நொடிகளில்..!!

Shiva Chelliah

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Penbugs

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்..!

Shiva Chelliah

மொழி – ஓர் உந்துதல் !!

Shiva Chelliah

World Tea Day..!

Shiva Chelliah

திரு.குரல்..!

கோடையில மழை!

Shiva Chelliah

என் இனிய தனிமையே..!

Shiva Chelliah

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Au Revoir [Book Review]: The Pain and the Glory of Being a Doctor

Lakshmi Muthiah

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah