Cinema

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறுத்தை சிவா

கமர்ஷியல் டைரக்டர்னா பொதுவா ஒரு சின்ன நக்கல் எல்லாருக்கும் வரும் அட இவரு வெறும் கமர்ஷியல் டைரக்டர் தான்பா அப்படின்னு ஒரு பேச்சு அது திரைத்துறையிலும் இருக்கும் , சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இருக்கும்.

ஆனால் கலைப்படங்களை ரசிக்கும் கூட்டம் இங்க ரொம்பவே குறைவு. அன்றாடம் உழைத்து விட்டு வரும் அடித்தட்டு மக்களுக்கான உலகத்தில் அவனுடைய கவலைகளை மறக்க வைச்சு அவனை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைக்கிறது சாதரணமான காரியம் இல்லை.

சில சீன் பேப்பர்ல நல்லா இருக்கும் ஆனா படமா எடுத்து பார்த்தா நல்லா இருக்காது. தியேட்டரில் ரசிகர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க , எந்த இடத்துல சோர்ந்து போவாங்கனு பார்த்து பார்தது எடுக்கனும் .அந்த அடித்தட்டு ரசிகனுக்கு போரடிக்காம அதே நேரத்தில் தான் சொல்ல வந்த கதையையும் சரியா கொண்டு போய் சேர்க்கனும் .

ஒரு கலை எங்க ஜெயிக்கும்னா வெகுஜனம் எப்ப தன்னுடையதாக ஒரு படைப்பை ஏற்றுக் கொள்கிறதோ அப்பதான் ஜெயிக்கும்.

சிறுத்தை சிவா இவர் எடுக்கிற படங்களை சுலபமாக கேலி செய்ற கூட்டம் இருக்கு அது அவரவர்களின் தனிப்பட்ட கருத்து நான் இங்க சிவாவை எங்க வியந்து பார்க்கிறேன் என்றால் சிவாவின் தனிப்பட்ட மேடைப் பேச்சுகள் மற்றும் அவரின் தனி நேர்காணல்கள் அனைத்துமே ஒரு கிளாஸ்.

ஆஜானுபாகுவான உருவ அமைப்பு இருந்தாலும் அதிர்ந்து பேசாத தன்மை , எப்பவுமே நேர்மறையான எண்ணங்கள் , தான் நம்பும் இறைவனின் மேலான பக்தி , தன்னை நம்பி பணம் போட்றவரை ரொம்ப அதிகமா மதிக்கும் தன்மை , தன்னுடைய நட்பு வட்டத்தை முடிந்தவரை தன்னுடைய வெற்றி பயணத்தில் துணையாக அழைத்து போறது சிவாவின் உலகம் ரொம்ப அழகானது.

தொடர்ந்து நாலு படம் பண்றார்னா அதுவும் ஒரு பெரிய நடிகர் கூடவே அப்படினா எந்த அளவிற்கு அவர் தன்னுடைய நண்பர் மீது உண்மையான விஸ்வாசத்தை வைத்து இருக்கிறார் என்பது புரியும்‌.

ரஜினி ஒரு இயக்குநரை தேர்வு பண்றதுலாம் சாதரணமாக நடக்காது அவரே அழைத்து சிவாக்கு படம் தர்றார்னா அது கண்டிப்பா சிவாவின் பெரிய வளர்ச்சிதான்.

சிவா ஒரு பக்கா கமர்ஷியல் மெட்டீரியல், நடிகர்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும் அதோட பல்ஸை அழகாக தெரிஞ்சி வைச்சி இருப்பதுதான் அவரின் பெரிய பலம். சூப்பர்ஸ்டாரின்‌ முழு கமர்ஷியல் ஆட்டத்தை அண்ணாத்த படத்தில் மீண்டும் பார்க்க கண்டிப்பா வாய்ப்பு இருக்கு.

ஒரு படத்தின் வெற்றி தோல்வி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் எப்பவுமே உழைப்புக்கு உரிய மரியாதை தர்ற‌ ஒரு மனுசன் எல்லா இடத்திலும் சிவா & டீம் தன்னுடன் பணிபுரியும் அனைவருக்கும் மரியாதையையும் , அன்பையும் அளவுக்கடந்து தர்ற மனுசன் …!

இவரின் பேட்டிகள் எல்லாம் ஒரு பாஸிடிவ் எனர்ஜியை சுலபமா தரும்‌‌…!

அந்த அமைதியும் சிரிப்பும் எப்பவும் இருக்கனும்யா உனக்கு…!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா <3

Related posts

Ennai Noki Paayum Thota: Decent entertainer

Penbugs

I felt like I had no fight left in me: Sushmita Sen on battling Addison disease

Penbugs

எந்த பிடிவாரண்டும் எனக்கு பிறப்பிக்கப்படவில்லை – இயக்குநர் ஷங்கர் அறிக்கை

Penbugs

Aanand L Rai to direct Vishwanathan Anand biopic

Penbugs

Psycho Trailer is Out | Penbugs

Anjali Raga Jammy

France’s International Space University pays tribute to Sushant Singh

Penbugs

Mahat-Prachi’s wedding reception

Penbugs

Ajith injured while shooting for Valimai

Penbugs

Gautham Menon says he is ready to make VTV2 if STR is ready

Penbugs

Vanitha Vijaykumar-Peter Paul to tie the knot on June 27!

Penbugs

Chelsea FC writes to Abhishek Bachchan over COVID19

Penbugs

Leave a Comment