ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை நாளை வெளியிடப்பட உள்ளது.
ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று இந்தியன் பிரமீயர் லீக் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக ஒத்திவைக்கப்பட்ட 2020ம் ஆண்டுக்கான போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுகிறது.
இதற்காக வீரர்கள் அந்நாட்டுக்கு சென்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்க் அணி வீரர்கள் 2 பேர் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதனால் போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதமாகி வந்தது.
இந்நிலையில் பிரிஜேஷ் பட்டேல் அளித்த பேட்டியில், 19ம் தேதி போட்டி தொடங்கும் எனவும், அட்டவணை நாளை வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Jofra Archer alleges “racial insult” during final day of NZ Test