Penbugs
Cinema

கைதி விமர்சனம் | Kaithi Review | Karthi

கைதி, ஒரு பாசமிகு அப்பாவிற்கும், அன்பிற்காக ஏங்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரிவையும்.. பிரிவால் உருவான அன்பையும் ஆக்சன் கலந்த த்ரில்லராக தந்துள்ளனர்..!

இது முழுக்க முழுக்க இயக்குநரின் படம், தனது திரைக்கதையின் மூலம் சீட்டின் நுனியில் நம்மை கைதியாகவே அமர வைத்துள்ளார் நமது லோகேஷ் கனகராஜ்… இந்த திரைக்கதையை நகர்த்த தான் உருவாக்கிய கதாபாத்திரம் தான் தில்லி.

கார்த்தி ஒவ்வொரு படத்திலும் நடிப்பின் வெவ்வேறு பரிமாணத்தை காட்டி வருகிறார்.. அந்த விதத்தில் அவர்க்கு கைதி ஒரு முக்கியமான படமாகவும் மைல் கல்லாகவும் அமைந்திருக்கிறது. சிவ பக்தராக படம் முழுதும் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். தனது கண் அசைவுகளாலும், நக்கல், நையாண்டி கலந்த நடிப்பினாலும், அவர் ஏக்கம் கலந்த நடிப்பாலும் படத்திற்கு உயிரோட்டம் தந்துள்ளார்.

அடுத்து நரேன்- தனக்களித்த கதாபாத்திரத்தின் நேர்த்தியை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாரு பொறுப்பான காவல்துறை அதிகாரியாக படம் முழுதும் பயனித்துள்ளார்..!

ஜியார்ஜ் மரியன் – ஒரு மாஸ் ஆன காவல் துறை அதிகாரியாக பின்னி பெடல் எடுத்துள்ளார்..

படத்தில் தீனா நகைச்சுவையையும் தாண்டி பல சமூக பிரச்சனைகளையும் இலை மறைவு காய் மறைவாக அடித்து நொறுக்கியுள்ளார்…

இதெல்லாம் இருக்கட்டும் இனிமே தான் முக்கியமான விஷயம் இருக்கு.. ஆம்..

படத்தின் முக்கிய பங்கே ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, சண்டை காட்சிகளே…

சண்டை காட்சிகள் யாவுமே தேவையான இடங்களில் தேவையான சூழலுக்கு ஏற்றவாரே அமைத்துள்ளனர்.. Hats Off to STUNT MASTER

ஒளிப்பதிவு பகுதியில் சத்யன் சிவன் தனது அசாத்திய பங்களிப்பின் மூலம் மிரட்டியுள்ளார். ஒவ்வொரு Frame க்கும் Justification குடுக்கும் வகையில் அமைத்துள்ளார்.. படம் முழுவதும் ஒரே இரவில் நகர்வதால் மிகவும் கவனமாக Lighting ஐ கையாண்டுள்ளார்..

படம் பார்க்க வந்த அனைவரையும் நகர விடாமல் தன் பின்னணி இசையின் மூலம் கட்டி போட்டு விட்டார் SAM CS பாடலே தேவையில்லை BACK GROUND MUSIC ஏ பேசுகிறது..

படத்தொகுப்பு – Philomon Raj, எந்த இடத்திலும் பிசிறு இல்லாமல், எந்த இடத்திலும் சோர்வைடய வைக்காமல் கட் பன்னி ஒட்டியுள்ளார்..!

இதை தவிர்த்து படத்தில் பல்வேறு Twist and Turns வைத்துள்ளார்.. பல்வேறு கதாபாத்திரங்கள் வருவதும் அவர்கள் யாவரும் தங்கள் கடமையை சரியாகவும் செய்துள்ளனர்… படத்தில் குழந்தையாக வரும் குட்டியிடமும் சிறப்பான நடிப்பு தெரிகிறது.. இதில் கதாநாயகி இல்லையென்றாலும் காதலை ஒரு நிமிடம் அனைவராலும் உணர முடியும்..!

படம் இறுதியில் வெளி வரும் போது எல்லாரையும் யோசனை செய்ய வைக்கிறார்.. மொத்தத்தில் கைதி, தீபாவளிக்கு வெளி வந்து மக்கள் மனதில் இடமும் பிடித்து விட்டார்..!

Related posts

Karthi-Ranjani blessed with baby boy

Penbugs

Kaithi to be remade in Hindi

Penbugs

Happy Birthday Karthi!

Penbugs

Corona outbreak: Suriya, Karthi, Sivakumar to donate 10 Lakhs for FEFSI workers

Penbugs

Agaram foundation- Enlightening for 10 years

Penbugs