Cinema

கர்ணன் டைட்டில் லுக் வெளியானது..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷுக்கு இன்று பிறந்தநாள்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் டைட்டில் லுக் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதற்காக காலடித் தடம் மட்டும் இருப்பது போன்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டும் இருந்தது.

கர்ணன் படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பதிவில்,
“மாரி செல்வராஜ் உடன் இந்தப் படத்தில் ஒரு பங்காக நான் இருப்பது பெருமையடைகிறேன். இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான ரிலீஸ்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கலைப்புலி தாணு தயாரித்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங் தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் நடந்து வந்தது.

90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டதாக படக்குழுவின் சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

“நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது-கர்ணன் ‘

என குறிப்பிட்டுள்ள இயக்குனர் மாரிதாஸ் இன்று மாலை 5.50 க்கு ராஜ மேளம் கேட்க தாயாராகுமாறு டிவிட் செய்துள்ளார்.

இன்று காலையில் ரகிட‌ ரகிட பாடல் வெளியான நிலையில் தற்போது கர்ணன் அப்டேட்டும் வந்துள்ளதால் தனுஷின் ரசிகர்கள் மகிழ்ச்சிகரமாக அவரின் பிறந்தநாளை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Related posts

Shalini wanted Ajith instead of Madhavan in Alaipayuthey!

Penbugs

Simbu will come regularly for the shoot from now on, assures Simbu’s mom!

Penbugs

அமைச்சரிடம் ஸ்டாலின் நலம் விசாரிப்பு …!

Kesavan Madumathy

Ranbir Kapoor confirms marriage plans with Alia Bhatt

Penbugs

Marriage Story Netflix[2019]: A Heart-rending Tale of the Hardships in a Marriage That Reckons the Sufferings of the Broken Hearts

Lakshmi Muthiah

Petition filed in Madras High Court seeking arrest of Kohli, Tamannah

Penbugs

Recent- Keerthy Suresh to play Rajinikanth’s sister?

Penbugs

Maara theme from Soorarai Pottru to be released in a week!

Penbugs

Miss India Netflix [2020] carries a stench of drama that’s fantasized in men’s world

Lakshmi Muthiah

Silence Prime Video[2020]:An incoherently mediocre and a disturbingly poor writing makes it a repulsive watch

Lakshmi Muthiah

In Pics: Nayanthara flags off Women’s day celebration event

Penbugs

My surname opened me doors; I stay here because of my work: Shruti Haasan

Penbugs

Leave a Comment