குக்கூ படத்துல நம்ம பிரதீப் குமார்
பாடுன பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது,
“
கோடையில மழ போல
என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன் கூட
“
பிரதீப் குமார் பாட்டு கேட்டா எப்படி மனசு
ஜில்லுன்னு இருக்கும் அது போல தான்
இந்த பதிவும் இந்த அக்னி நட்சத்திர
வெயிலுக்கு இது நிச்சயம் உங்களுக்கு
அவசியமானது,
ஸ்கூல் படிக்கிறப்போ லஞ்ச் பிரேக் ஒரு
மணி நேரம் விடுவாங்க அதுல வெறும்
ஐந்து நிமிஷத்துல அவசரம் அவசரமா
ஒருத்தன் டிப்பன ஒருத்தன் மாத்தி
சாப்பிட்டு முடிச்சுட்டு மீதி இருக்குற
ஐம்பது நிமிஷத்துல பசங்க கூட
கிரிக்கெட் விளையாடுவோம் நண்பன்
வீட்டு பின்னாடி இருக்க காலியான
இடத்துல பசங்க எல்லாம் சேர்ந்து,
அந்த நண்பன் வீடு ஸ்கூலுக்கு
பக்கத்துலயே தான் இருக்கும், 40 நிமிஷ
கிரிக்கெட் தினமும், தினமும் பல சச்சின்
சேவாக் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்கள்
அமையும் பலர் ஜோண்ட்டி ரோட்ஸ்
என தங்களுக்குள் பாவித்து கேட்ச்
பிடிக்கிறேன் என்று விழுந்து வாரி
ரத்தக்காவு வாங்கிய படலமெல்லாம்
அரங்கேறிய காலம் அது,
அப்படி நாற்பது நிமிடங்கள் கிரிக்கெட்
விளையாடிய பின்பு ஒவ்வொருவனுக்கும்
ஏதோ கைலாய மலை ஏறியது போல
வேர்த்து கொட்டும், கடைசி பத்து
நிமிஷத்தில் பள்ளிக்கு அருகே இருக்கும்
கரும்பு சாறு வண்டியில் கூலிங்கா ஐஸ்
போட்டு அந்த கரும்பு சாரை குடிப்போம்
சில்லரைகளை எல்லாம் ஒன்று திரட்டி
குடித்து விட்டு இன்னும் கொஞ்சம்
எக்ஸ்ட்ரா ஊத்துங்க – ன்னு உரிமையா
கேட்டு வாங்கி குடிச்ச காலம் சில
நேரங்கள்ல நாங்க குடிக்க வரப்போ தான்
கரும்ப மெஷின் குள்ள விட்டு வெளிய எடுத்து சுத்திட்டு இருப்பார் கடைக்கார
அண்ணன், லேட்டா குடிச்சுட்டு
கிளாஸ்க்கு தாமதமா போய் வெளிய
நின்ன காலம் கூட இருக்கு,
அப்பறம் ஞாயிறு கிழமை கிரிக்கெட்
காலை எட்டு மணிக்கு விடிஞ்சும்
விடியாம சென்று மாலை பொழுதில்
சூரியன் திசை மாறி நிலவு தென்படும்
வேளை வரை வேகாத வெயிலில்
கரும்புச்சாறு மற்றும் ரஸ்னா என
தண்ணீர் ஆகாரம் மட்டுமே குடித்து
நாட்களை நகர்த்திய பொற்காலம் அது,
இப்படி கரும்புச்சாறு வண்டி என்னை
போல உங்கள் வாழ்விலும் ஒரு முக்கிய
பங்கு வகிக்கும்,
இன்னக்கி நம்ம பார்க்க போறது
அவங்கள பத்தி தான் கரும்பு சாறு
வண்டி கடை வைத்திருக்கும்
மனிதர்களும் அவர்களின் வாழ்வாதார
சூழலும்,
பொதுவாக ஏப்ரல், மே, ஜூன் நம்ம
ஊருல வெயில் அனலா இருக்கும்
அக்னி நட்சத்திரமும் அப்போ தான் வரும்
பதினோரு மணி தாண்டிட்டா சூரிய
பகவான் தன்னோட உக்கிரத்தை நம்ம
தல மேல அவர் சுமைய
இறக்கிவச்சுடுவார், அரசாங்கமும்
மரத்தை வெட்டி சாலைய பெருசு
பண்ணனால ஒதுங்க இடம் இல்லாம
உச்சந்தலையில இருந்து உள்ளங்கால்
நகம் வர வேர்த்து வேர்த்து வெயில்ல
உருகி வரும்போது ஒருவர் கரும்பு சாறு
வண்டியில் தன் வலுவை எல்லாம்
கொடுத்து சுற்றி கரும்பை சக்கையாய்
ஆக்கி நீராக எடுத்து கொஞ்சம் ஐஸ்
கட்டியை அதற்குள் உடைத்து போட்டு
கொடுப்பார் மழைச்சாரல் போல
அப்படியே கொஞ்சம் எலுமிச்சம் பழ
சாறும் கொஞ்சோண்டு இஞ்சியும்
சேர்த்து போட்டு ஒரு பழரசம் வகையில்
கொடுப்பார்,
மற்ற நாட்களை விட கோடைகாலங்களில்
இவர்களுக்கு வியாபாரம் நன்றாகவே
ஓடும், மேல்நாட்டு குளிர்பானங்களின்
மேல் மக்கள் கொண்டுள்ள அளவற்ற
போதைக்கு கரும்பு சாறு என்றும் சோடை
போகாது என்று சொல்லுவது போல் நம்ம
ஊரில் கோடை காலத்தில் இதற்கு தனி
மவுசு தான்,
அவர்களின் வாழ்வாதார சூழல் பற்றி
பார்த்தோம் என்றால் காலை ஒன்பது
மணிக்கு வண்டியை ஒட்ட
தொடங்கினால் மாலை ஐந்து மணி வரை
ஓடும், இப்போது மெஷின் உதவியில்
ஓடுவதால் அவர்களுக்கு வேலை
கொஞ்சம் எளிதாகி இருக்கிறது
மழைக்காலங்களில் கொஞ்சம் ஓட்டம்
கம்மியாக இருக்கும் ஆனாலும் நம்ம
பசங்க மழையில ஐஸ் சாப்பிடுவது
எப்படியோ அப்படி கரும்பு சாறு குடிக்கும்
ஒரு சில பிரியர்களும் இங்கே
இருக்கிறார்கள் அதில் என்னையும்
நான் சேர்த்துக்கொள்கிறேன்,
நம்ம ஊரில் அதாவது சிட்டியில்
இருப்பவர்கள் பொங்கல் தினத்தை தவிர
பிற நாட்களில் இவர்களிடம் மட்டும் தான்
கரும்பை பார்க்கமுடியும், கிராம
புறங்களில் இருப்பவர்கள் கரும்பு
சாகுபடி செய்வதை பார்த்து
பழக்கப்பட்டவர்கள்,
வெயில் காலங்களில் கரும்புச்சாறு
குடிப்பதனால் உடலின் நீர்ச்சத்து
தாக்குப்பிடித்து உடம்பில் நல்ல
புத்துணர்ச்சி கிடைக்கிறது,
ஆயிரம் மேல்நாட்டு குளிர்பானம்
இறக்குமதி ஆனாலும் கரும்புச்சாறுக்கு
இருக்கும் மவுசு தனித்துவமானது,
மேல்நாட்டு குளிர்பானங்கள் குடிங்க
கொஞ்சம் அப்போ அப்போ நம்ம
மருத்துவ குணமுள்ள இந்த
கரும்புச்சாறு போன்றவற்றையும் குடிங்க,
நம்ம ஊரில் முக்குக்கு முக்குக்கு
கரும்புச்சாறு வண்டி இருக்கிறது,
அங்கெல்லாம் வயதான முதியவர்கள்
கூட ஒரு குடைக்கு அடியே கால் வலிக்க
நின்று கொண்டு அன்றாட வருமானம்
வேண்டி தொழில் செய்துகொண்டு தான்
இருக்கிறார்கள்,
“
வெயிலோடு சண்டையிட்டு
எனக்கு புத்துணர்ச்சியை தந்தாய்
மழையோடு பக்குவப்பட்டு
எனக்கு குளிர்ச்சியையும் தந்தாய்
“
நாளைக்கே போங்க
கரும்புச்சாறு குடிங்க
உடல் ஆரோக்கியம் பெறுங்க..!!
புகைப்படம் உதவி :
Franklin Kumar அண்ணே
US: JK Rowling’s book sales sees low after “transphobic” comments