Editorial News

மத்திய பட்ஜெட் அறிவிப்பு ; தமிழகத்திற்குபுதிய திட்டங்கள்

நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாக இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் இந்த தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மும்பை-கன்னியாகுமரி இடையேயும் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் கேரளாவின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் நவீன சாலைகள் அமைக்கப்படும்.

சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 277 கிலோமீட்டர் நீளத்திற்கு விரைவுச் சாலையாக, சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை பணிகளுக்கான ஒப்பந்தம் வரும் நிதியாண்டில் வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கும் .

இதேபோல, 278 கிலோமீட்டர் தொலைவுக்கு பெங்களூரு-சென்னை இடையே விரைவுச் சாலை திட்டம் நடப்பு நிதியாண்டிலேயே தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல் பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் சென்னை உள்ளிட்ட 5 முக்கிய மீன்பிடி துறைமுகங்களை பொருளாதார மையங்களாக மேம்படுத்தும் பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காரணமாக இத்தகைய அறிவிப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related posts

Bigg Boss Tamil 4, Day 2, Written Updates

Lakshmi Muthiah

2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

Penbugs

Bigg Boss Tamil 4, Day 77, Written Updates

Lakshmi Muthiah

தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு

Penbugs

MS Dhoni- Sakshi Dhoni to produce Mythological sci-fi webseries

Penbugs

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவு

Kesavan Madumathy

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

The captain’s go-to bowler-Neil Wagner

Penbugs

அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

Penbugs

Football: Brazil to pay equal salary for both men and women national players

Penbugs

நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனை

Penbugs

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்

Kesavan Madumathy

Leave a Comment