ஏறத்தாழ நாற்பது ஆண்டுக்களுக்கும் மேலாக வெவ்வேறு மொழிகளில், பல நூறு படங்களில் நடிப்பின் அளவுகோல் மாறாமல் இளமையாக நடித்து கொண்டு இருக்கும் மம்முட்டி.நேர்த்தியான நடிகர் மட்டும் அல்லாமல், மம்முட்டி ஆகச்சிறந்த மனிதனாக பரிச்சயம் ஆனது, அவர் எழுதி மொழிமாற்றம் செய்யப்பட்ட மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் எனும் புத்தகத்தின் மூலமே.
இத்தனை ஆண்டுகால திரை உலக அனுபவம்,உச்ச நட்சத்திர அந்தஸ்து, இந்திய நாட்டின் முக்கிய, மூத்த நடிகராக இருந்தாலும், அவரை பற்றியும் அவரால் வளர்ந்தவர்கள் பற்றியும் எழுத ஆயிரமாயிரம் கதைகள் , சம்பவங்கள் இருந்தும்… தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள், பார்த்த காட்சிகளை, நிகழ்விகளை முன்வைத்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்பதே பாராட்டுக்குரிய ஆச்சர்யமான விஷயம்.தன்னை பார்க்க வந்த கிழவியை, ஒரு பெரிய நடிகர் என அறியாமல் சாப்பிடும் கையிலே தனக்காக உணவு வைத்த முதியவரை, சிறுவயதிலேயே இறந்து போன தன் சமகாலத்து சினிமாதுறையிலிருந்த சிநேகிதனின் மரணம் பற்றியும், தன்னுடைய ஈகோவை பற்றியும், மற்றவர்கள் தன் மேல் கொண்டுள்ள அன்பை பற்றியும் இந்த புத்தகத்தில் விரிவாகவும், மனம் திறந்தும் எழுதி இருந்தது ஆச்சர்யமே.
சாதாரண வக்கீலாக இருந்து, பின் சினிமா ஆசையில் நடிகராகி இப்போது கதாபாத்திரங்களுக்கு பேருயிர் ஊட்டி, மூன்று தேசிய விருதுகளும், பல மாநில விருதுகளும் பெற்று ஆகச்சிறந்த நடிகராக அறியப்படுகிறார்.கற்பனை கதாபாத்திரங்களுக்கு உயிர் தருவது மட்டுமன்றி,அண்ணல் அம்பேத்கார், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி போன்றோரின் வாழ்க்கை வரலாற்று படங்களிலும் மிக சிறந்த முறையில் போலித்தனம் சேராதவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்.
பேரன்பு போன்ற படமாகட்டும், shylock போன்ற மசாலா படமாகட்டும் இமேஜ் என்ற வலையில் சிக்காமல் இத்தனை ஆண்டுகாலம் சினிமாவில் சிறந்து விளங்கிவருபவர். அதுபோல, ஒரே வருடத்தில் இவர் நடித்த 36 படங்கள் வெளியான வரலாறெல்லாம் உண்டு. சிறந்த இலக்கிய அறிவும், அரசியல் சார்ந்த தெளிவும் உள்ள ஒரு நடிகர். முதிர்ச்சி முகத்தில் தெரியாமல் இன்னும் முப்பதுகளில் இருக்கும் இளைய நடிகர்களை போல, பம்பரமாக பல மொழிகளில் நடித்து கொண்டு இருக்கும், மலையாள தேசத்தின் மார்க்கண்டேயன் மம்முட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
I will not apologise: Rajinikanth about his comments on Periyar