Penbugs
Coronavirus

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

பிரதமரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று சூழல் தொடா்பாகவும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான வியூகங்கள் தொடா்பாகவும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவிலும் தீவிரமாகியுள்ளது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாட்டில் கடந்த மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டிருந்த தேசிய ஊரடங்கு, பின்னா் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்பொருட்டு சில தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடந்த திங்கள்கிழமை முதல் ஊரடங்கிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. எனினும், கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு ஊரடங்கு தளா்வுகள் பொருந்தாது என்று அறிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

Related posts

Moeen Ali tested positive for COVID19

Penbugs

அண்ணா பல்கலைகழகத்தை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை…!

Penbugs

தமிழகத்தில் இன்று 5548 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

UP Police files FIR on Scroll.in’s Executive Editor for reporting impact of lockdown

Penbugs

தமிழகத்தில் இன்று 5800 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஊரடங்கு: அம்மா உணவகங்களில் இலவச உணவு

Penbugs

RP Singh’s father passes away due to COVID19

Penbugs

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் உரை..!

Penbugs

COVID19: Shardul Thakur becomes 1st Indian cricketer to begin outdoor practice

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1989 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

9Min9PM: Fire breaks down at Ernavur garbage dump

Penbugs

கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் நன்றாகவே குறைவு.! மத்திய அரசு தகவல்

Penbugs